தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


சிறப்புப் பாயிரம்
9

 

பதைப்பற் றிறுமாந்து பாறையொத்த நெஞ்சைப்
பதைப்புற் றுருகப் பணித்தான் - புதைத்தவன்பால்

எங்கு மிருப்பா னிறையெனினு மூர்த்தியிடைத்
தங்கும் விசேடமெனச் சார்வித்தான் - அங்கெனக்குக்

கண்ணினைநீர் வார்க்கவுடல் கம்பிக்க மெய்ப்புளக
நண்ணவொரு சால நவிற்றினான்......

.........மெய்யை
விரிந்த பொருளால் விளம்பிய வென்னையன்
பிரிந்தருளி னானென்னைப் பின்னர்......"

என்ற சுவானுபூதி வாக்கில் மெய்யை விரிந்த பொருளால் விளம்பிய நிலையை உணர்த்தும் பகுதி இங்கு மிகப் போற்றத்தக்கது. தந்தை அறிவு மகன் அறிவாதலால் நமது ஆசிரியரே (சிவக்கவிமணியே) விரிவுரையாசிரியராயிருத்தல் மிகத்தகுதியுடைத்தென்பது திருவருட் டுணிபு. "பல்லூழி காலம் பயின்றரனையர்ச்சிக்கில், நல்லறிவு சற்றே நகும்" - "ஆடுபல தேடலாம், ஆனமத யானை யொன்று, தேடலரிதே" என்ற பழமொழிகள் சிந்திக்கத் தக்கன. இங்கு இவ்விரிவுரையேயன்றித் திருப்பேரூர்ப் பட்டிப்பெருமான் பேரில் பல பிரபந்தங்களும் துதிநூல்களும் இயற்றியுள்ளார். (பேரூர்ப் புராணம் பதிப்பாளார் முகவுரையை ஆழ்ந்து பார்த்துச் சிந்தித்துணர்க). இவ்வாறாக இவ் வழிவழித் தொண்டர், ஆசிரியர் இதுவரை ஸ்ரீமத் திருநாவுக்கரசு நாயனாார் புராணம் முற்றும் திருவருள் துணைகொண்டு உரையியற்றி யுள்ளார்கள்.

இதனுள் ஸ்ரீ திருநாவுக்கரசு நாயனார் புராணத்தைத் திருக்கைலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 24-வது. குருமூர்த்தி ஸ்ரீலஸ்ரீ ஷண்முகதேசிக ஞானசம்பந்த மகா சன்னிதானம், ஆதீனச் சார்பில் வெளியிடக் கருணைபுரிந்தார்கள். அப்படியே இனிதே பூர்த்தியாக ஆசியருளி அரங்கேற்றம் செய்யப்பெறக்கட்டளையிட்டார்கள். அது அம்மகாசன்னிதானத்தின் அருள் ஆட்சி 10 ஆண்டு நிறைவு விழா இரண்டாம் நாள் (6-9-43) சுபானு ஆவணி இருபத்தோராம் நாள் சோமவாரம் அனுஷ நக்ஷத்திரம் சப்தமி சித்தயோக நன்னாளில், சென்னை மதமான்யக் கழகம் (H. R. E. போர்டு) தலைவர் திருவாளார் - திவான்பகதூர் - T. M. நாராயணசாமி பிள்ளை, B.A., B.L. தலைமையில், ஸ்ரீலஸ்ரீ மகாசன்னிதானத்தின் திருமுன், அடியார் கூட்டம் சூழச் சிவ பக்த சிரோன்மணி முதலியார் அவர்கள் - பூமாலை பட்டாடை சூட்டப்பெற்று அன்பர்கள் போற்ற, ஹர ஹர சப்தம் முழங்க, அவையினார் பூமாரி பொழிய, அரங்கேற்றம் செய்யப்பட்டது. தனிப் புத்தக உருவத்தில் வெளிவந்துள்ளது தமிழுலகுக்கும் சைவ உலகுக்கும் மட்டுமன்று, மண்மிசைப் பிறந்து வாளா நாள் போக்கித் தாமும் கெட்டுப் பிறையும் கெடுக்கும் உலகத்துக்கும் இது ஈடேற்றும் புணையாக உதவும் என்று சொல்லலாம்.

இவ்வுரையின் நலங்கள் பல. நூல் முழுதும் படித்துப் பயன்பெறுவதற்குப் போதிய காலமும், மனமும், பிறவும் பெறதவர்கள் அறியும் பொருட்டும், பிறர்க்கும் இதில் மனவெழுச்சியும் ஊக்கமும் சேர்தற்பொருட்டும், அவற்றுட்சிலவற்றை

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:23:31(இந்திய நேரம்)