Primary tabs
திருநாரையூர் ஸ்ரீ பொல்லாப்பிள்ளையார் அநுக்கிரகம் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் "திருவந்தாதியை" வழிநூலாக அருளினார். சிதம்பரத்தில் பொன்னம் பலத்தில் ஸ்ரீ நடராசப் பெருமான் "உலகெலாம்" என்று அசரீரியாக அருளக்குன்றத்தூர் ஸ்ரீ சேக்கிழார் நாயனார் சார்பு நூலாகப் பொரிய புராணம் பாடியருளினார். அவ்வரிய செயல் ஸ்ரீ சேக்கிழாக் கல்லால் மற்றை யாவர்க்கும் எளிதல்லவெனச் சந்தான குரவர் நால்வருள் ஒருவரான உமாபதி சிவாசாரியார் போற்றினார். அச்சேக்கிழாரின் திருவடியையே சிந்தித்து அருளைப் பெற்ற திருவாரூருக்கடுத்த காவால்குடித் திருவாளர் சுப்பா முதலியார் என்பார் தெள்ளிய நடையில் ஆயிரம் பாக்களில் அந்தாதித் தொடராகப் பெரிய புராணச் சுருக்கம் பாடி முடித்தார். அதுபோலவே அச்சேக்கிழாரின் திருவருட் பேற்றால் இப்பெரிய புராணத்துக்கு அரிய பெரிய விரிவுரையைக் கண்டவர் அக்குலதிலகராய்க், குருலிங்கசங்கம சிவ பக்தியிற் சிறந்த, சிவக்கவிமணியாகிய திருவாளர் கோயம்புத்தூர் வழக்கறிஞர் C.K. சுப்பிரமணிய முதன்மையார் ஆவர். அவரே இவ்வுரை செய்வதற்குத் தக்கவர் என்பது இச்சிதைவப் பெருஞ்செல்வரின் தந்தையாரின் வரலாற்றால் விளங்கும். இச்சிவப்பணிக்கு உரியராம் ஆற்றல் உண்டாம்படி அத்தொண்டர்களோடு கூட்டி, அப்பாலும் அடிச்சார்ந்தாரில் ஒரு வராய் அத்திருக்கூட்டத்தினரில் காலத்தால் பிந்தியானாலும், இடத்தால் இவ்வையகம் போற்ற விரிவுரை ஆசிரியராக முந்தியிருப்பச் செய்த மகற்காற்றும் உதவியைச் செய்து "இவன் தந்தை என்னேற்றான் கொல்" என யாவரும் வியந்து நன்றிபாராட்டத்தக்க தந்தையாராகிய கோவை மகாவித்துவானும், வழக்கறிஞரும், அருட்புலவருமாகிய காலஞ் சென்ற தவச்செல்வர் திரு. கந்தசாமி முதலியார் என்பவரைப் பற்றியும், அவரருளிய பல பிரபந்தத் திரட்டுகளில் பேரூர்ப் புராண முகவுரையில் அச்சான கிள்ளை விடு தூது என்ற நூலிலிருந்து சில பகுதிகளை, இடமில்லை என்று விடாது, பேசி மகிழ்வாம். திருக்கைலாய பரம்பரையில் தென்றிசைத் தமிழ் முனிவர், அகத்தியர் அநுக்கிர பரம்பரையில் வழிவழி அடிமையாய்ச் சிவானுபூதிச் செல்வராய் அவர் விளங்கினமையைக் காட்டும் அகச்சான்றுக் கண்ணிகளாவன (441 - 449 - 515)
...... ...... ......... ...... ... ...... - வாய்த்தவெளிப்
பட்டப் பகலிற்கண் பார்வையிலாக் கூகையைப்போல்
தட்டித் தடவித் தவியாதே - கிட்டி
அவசமயத் துள்ளாழ்ந் தலையாதே யுன்றன்
சுவசமயந் தேரென்று சொன்னான் - சிவசமயத்
துண்மையெலா நெஞ்சத் துறுத்தினான் வேற்றுமதத்
திண்மையெலா நில்லாமற் செய்திட்டான் - அண்மைசெறி
பத்தி நெறியும் பழவடியார் தாள்பணியும்
புத்திநெறி யும்மெனக்குப் போதித்தான் - சித்திநெறி
காட்டினா னென்கட் கலந்துநின்ற தீக்குழுவை
யோட்டினான் வேறோ ருருச்செய்தான் - வேட்டுவனோர்
மென்புழுவைத் தன்படிவ மெய்துவித்த வண்ணமெனைத்
தன்புதிய கோலஞ் சமைப்பித்தான் - முன்பு