Primary tabs
ரவருயிரோ டிசைவிப்பன்" (1297) என்றும், "அம்பொன்மணி நூல்தாங்கானைத்துயிர்க்கும் அருள் தாங்கி" (1299) என்றும் வரும் பாட்டுக்களி லுரைத்தவற்றைப் பார்க்கக் கடவன்.
3. புறச்சமயம் புகுந்தவன் மீளவும் சைவத்திற் சாரும் நிலை வருமாயின், அதற்குத் திருநீறு பூசுதலும் திருவைந்தெழுத்து ஓதுதலுமே போதியது - வேறு கழுவாய் வேண்டாமென்று 1331-ம் பாட்டின்கீழ் விசேட ஆராய்ச்சிசெய்வோரு முண்டு. இதுபற்றி இவையே போதா என்றும், சிவாகமங்களுள் வகுத்தபடி உடல் வருத்தும் வேறு கழுவாய்களும் வேண்டப்படுவன என்றும், அவ்வாறு திருநாவுக்கரசு நாயனாருக்கும் இறைவர் சூலைநோய் தந்து அருளி அதன் பின்பே, சைவசமயம் புகும் திறம் தந்தருளினர் என்றும், பின்னரும் அதுபற்றித் தோளில் சூலமும் இடபமும் பொறிக்கும் கழுவாயும் இறைவரை வேண்டி அவ்வாறே அருளப்பெற்றனர் என்றும் எடுத்துக் காட்டியுள்ள உரைப்பகுதிகளின் நுட்பங்கள் கண்டு ஆராய்ச்சியாளர்கள் உண்மைநிலை தெளியத்தக்கார். 81-207 பக்கங்கள் பார்க்க.
4. கடலினுள் கல் மிதக்குமா? நீற்றறையினுள் தீக்கொளுவவிட்டு ஏழுநாள் இருந்தும் சாம்பர் ஆகாது உயிருடன் ஒருவர் மீளுதல் இயலுமா? என்று கேட்டு, இவ்வாறு புராணங்களுள் வரும் பகுதிகளையும் எழுதியும் நம்பியும் வந்த அறியாமைக்கு நமது பெரியோர்களை அவ்வளவின் மன்னித்து விடுவோரும் அநேகர் உளர். இவை பற்றி 127-129 பக்கங்களில் வரும் உரைப் பகுதிகளை இவ்வாராய்ச்சியாளர் படித்தாற் பயன் பெறுவார் என்பதுடன் பெரியோர்களிடம் அபசாரப்பட்டுப் பாவத்துக்காளாகாமலும் வாழ்வர்.
5. உண்ணாவிரதம் என்ற ‘கொள்கை' இப்போது பரவி வருதல் காண்கிறோம். அது புதிதாய்க் கண்டதொன்று என்று பலர் கருதுகின்றனர். அப்பர் சுவாமிகள் இதை அனுட்டித்த செய்தியைப்பற்றிய உரை கவனிக்கத் தக்கது. (498) பக்கம்.
6. மந்திரங்களால் தீ, நோய், விலங்குகளின் தீமை முதலியவற்றை விலக்க முடியுமா? நஞ்சு உண்ட பின்பு அதன் தீமை எய்தாது தப்புதல் கூடுமா? ஆளுடைய பிள்ளையாருக்குத் திருவீழிமிழயைில் காசு கொடுத்த இறைவர் வாசியுடனும், அப்பர் சுவாமிகளுக்கு வாசி இல்லாமலும் கொடுத்த காரணம் என்ன? என்றிவ்வாறு விசரிக்கும் கவலை கொண்ட அன்பர்கள் அவ்வப்பகுதிகளின் கீழ் வரும் உரைகளைப் படித்தாற் பயன் பெறுவர் (மந்திரம் - 142; நஞ்சு - 138; வாசி (வட்டம்) 433; (பக்கம்) முதலியவை காண்க.
7. ஆளுடைய பிள்ளையாரது பெருஞ்சரித முழுமையும், அப்பர் சுவாமிகளது சரித முழுமையும் மிகச் சுருக்கமாகப் பாகுபாடுசெய்து அறியவேண்டின் பிள்ளையார் சரிதம் 263-ம் பக்கத்திலும், அப்பர் சுவாமிகள் சரிதம் 48-ம் பக்கத்திலும் பார்க்கலாம்.
8. சொற்பொருள் விளக்க நுட்பங்கள் மிகச் சிறப்பாய் இவ்வுரையில் அமைந்துள்ளன. கலந்து (காவிரியின் இருகரையும் கலந்து) பக்கம் 277; குறிப்புணர்த்த (பக்கம் 69); சிவானந்த ஞான வடிவு (739) முதலியவை பார்க்க.
9. கலைஞான நுட்பங்கள் :- வான சாத்திர நுட்பம் (Sun poemts) (பக்கம் - 309): உடல் நுட்பம் (பக்கம் 374); பரதநூல் நுட்பம் (பக்கம் 726) பார்க்க.