Primary tabs
10. சைவ சித்தாந்த ஞானசாத்திர உண்மைகள் அங்கங்கும் விளக்கப் படுகின்றன:- திருவைந்தெழுத்து பக்கம் - 166 முதலியவை காண்க.
11. தேவார முதலிய அருணூல்களில், உரையாசிரியரது அனுபவ முறையில் அறிந்த சில குறிப்புக்கள் அங்கங்கும் தரப்படுகின்றன. அவை உயிர்களுக்கு அருணூல்களின் உறுதிப்பாட்டினை விளைக்க உதவுவன. பக்கம் (648).
இவை முதலானபல சிறப்புக்களும் காணலாம். எனவே எம் பரமாசாரிய ஞானதேசிகரின் "சண்முக"ப் புனித நாமத்தையே தமக்கும் "சுப்பிரமணிய" என்ற திருப்பெயராகக் கொண்டு, சிவகுருநாதனின் திருவடிச் சிந்தனையையே என்றும் மறவா நினைப்பூட்டி, அடியார்களை "திருவடிசேர் முத்திக்கே" செல்லும் வழிகாட்டி.
"அறத்தி னீடியவகத்திடைச் சிவானந்தம் விளைய, உறத்த டாதுமுன் பாய்த்திய வொழுக்கநீர் முழுதும், புறத்தினேகுறக் கவுழ்த்ததே போன்மெனப் புனல்கண், ணிறத்தின் வாக்குமெய் யன்பின ரெவரையும் நினைப்பாம்" என நித்த நியமம் கொண்டுள்ளவரே நமது உரையாசிரியர் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்கும்.
கரிமுகக் கணபதியையும் திருவேலிறை கந்தவேளையும் பெற்ற உமைபாகம் ஆலவாயண்ணல் திருவருளால் சிவக்கவிமணியும் சிவபக்த சிரோன்மணியுமான திரு. கந்தசாமி பெற்ற சுப்ரமணிய முதலியாரவர்கள் நோயற்ற திடகாத்திரமும் குறைவற்ற செல்வமுமுடையராய் "எடுத்த மாக்கத்தை" யின் விரிவுரை முற்றும் இனிதே விரைவில் பூர்த்தியாகிய நிறைவேற்றப் பெற்றுச் சிவத்தொண்டு புரிந்து நீடுவாழ்க.
கதிவாழ்க வேநல்ல வாகமம் வாழ்கநற் கண்மணியுன்
பதிவாழ்க சைவந் திருநீறுங் கண்டியும் வாழ்கவருட்
குருவாகும் நின்றன் றிருக்கூட்டம் வாழ்கநற் கோநிரைகள்
தெருவாழ் தருமைக் திருஞான சம்பந்த தேசிகனே
திருச்சிற்றம்பலம்
திருமபுரவாதீனம்
திருசிரபுரம்
மலைக்கோட்டை
மௌன மடம்
7-11-43