தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


14
முதற்பாகத்தின் முன்னுரை

 

ஆதீனத் தனி வெளியீடாக அமைதல் தகுதி என்று திருவுள்ளங்கொண்டு மகா சந்நிதானங்கள் அவ்வாறே ஆணைதந்து அதற்காவன எல்லாம் மனமுவந்து செய்தருளினார்கள்; பல்லாயிரங்களாக வெண்பொற்காசுகளைப் பரிந்து தடையின்றி அவ்வப்போது உதவியும், படங்கள் எடுப்பித்தும், மற்றும் பலவகையாலும் ஊக்கம்செய்தும் இதனை நிறைவாக்க அருள்புரிந்தார்கள். தமது அருளாட்சியின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் இரண்டாம் நாட் கொண்டாட்டத்தில் 6-9-1943-ல் தமது ஆதீன மடாலய மண்டபத்தில் தம் திருமுன்பு தமிழ்ப் புலவர் மகாநாடு கூட்டிச், சென்னை அறநிலையச் சொத்துப் பாதுகாப்புச் சபைத் தலைவர் திவான்பகதூர் - திரு. T. M. நாராயணசாமி பிள்ளையவர்கள், B.A., B.L., F.M.U., தலைமையில் இதனை அரங்கேற்றச் செய்து ஆசி புரிந்தருளினார்கள். மேலும் அவர்களது கருணைக்கொடை வள்ளன்மை காலத்தினாற்செய்த பெருநன்றியாகும். அதனைப் பெற்றிராவிடின் இவ்வெளியீடு பெரிதும் முட்டுப்பாடுற்றிருக்கும் என்று துணிந்து கூறுவேன். இதுபோன்ற சிவதருமங்கள் பலவும் சிறக்க அவர்களது அருளாட்சியில் ஆணையிட்டுப் புரிந்தருளி வருவது சைவவுலகம் நன்கறியும். அவர்களது திருமரபு நீடுவாழ்க. என் மனமார்ந்த நன்றியை அவர்களது திருவடிகளிற் செலுத்துகின்றேன்.

3. பல அன்பர்களின் உதவிகள்

எனது உழுவலன்பர் - இராவ்பதூர் - திரு. C.M. இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள், B.A., B.L., F.R.G.S., F.M.U. (சென்னை அறநிலையச் சொத்துப் பாதுகாப்பு நிலயம் கனம் அங்கத்தினர்) தமது பல அலுவல்களிடையில் அப்பர் சுவாமிகள் சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எழுதி அன்புடன் உதவினார்கள். அதனோடு தமது தலயாத்திரைகளில் எடுப்பித்த தொண்டைநாட்டு, வடநாட்டுத் தலங்களின் படங்களையும் உதவினார்கள்.

எனது அரிய நண்பரும் பேரன்பருமாகிய தணிகைமணி, இராவ்பகதூர் - திரு. V.S. செங்கல்வராய பிள்ளை, M.A., அவர்கள் அன்புடன் பல திருத்தங்களையும்; எனது மற்றொரு அன்பர் திருவாளர் - கோயமுத்தூர் - பொள்ளாச்சி - காளியாபுரம் - ப. மலையப்ப கவுண்டர் அவர்கள் நாயனார் சென்றருளிய தலங்களைப்பற்றிய பல குறிப்புக்களையும் எழுதியனுப்பி யுள்ளார்கள். அவை தனியிதழில் தரப்பட்டுள்ளன. அன்பர்கள் அவற்றை ஏற்றபெற்றி அவ்வவ்விடங்களில் அமைத்துக்கொள்வார்களாக.

இப்புராண உரை வெளியீட்டில் தொடக்கத்திலிருந்து அரிய பல தொண்டுகளையும் செய்துவரும் திருத்துறையூர் அன்பர் திரு. K. ஆறுமுக நாயனார் அவர்கள் இப்பகுதியில் பெருந்தொண்டாற்றி யுள்ளார்கள். அவர்கள் திருநாவுக்கரசு நாயனாரிடத்துப் பேரன்பு பூண்டவர்கள் என்பதும், அது காரணமாகவே தமது வறுமையையும் பொருட்படுத்தாது அந்நாயனாரது தேவாரத் திருமுறைகளைத் தமது சொந்தச் செலவில் மூன்றாம் பதிப்பாக வெளியிட்டு அடக்க விலைக்கு உதவினர் என்பதும் யாவருமறிவார். அவர்கள் இப்புராண உரையின் நிறைவைக் கண்டாலன்றி தமது ஊருக்குக் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் சென்னையில் வேறு அலுவல் ஒன்றுமின்றி இதற்காகவே பல மாதங்கள் தங்கி ஆவன எல்லாம் அரிது முயன்று உதவினர். காகிதப் பஞ்சம் மிக்க இந்நாளில் அச்சுக்குரிய காகிதங்களைப் பல இடங்களிலும் அலைந்தலைந்து பெற்றுதவியும், பாட்டு முதற் குறிப்பு முதலியவற்றையும் தோத்திரத் திரட்டையும் தொகுத்து எழுதியும்,

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:42:59(இந்திய நேரம்)