தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சில குறிப்புக்களும் திருத்தங்களும்


சில திருத்தங்களும் குறிப்புக்களும்
17

 

சில திருத்தங்களும் குறிப்புக்களும்

அன்பர் - இராவ்பகதூர்

திரு. V. S. செங்கல்வராய பிள்ளை, M.A., அவர்கள் எழுதியது

1315. "வச்சிரமும் பிறவுமாம்" - வச்சிரம் - உட்பாய்ந்தால் பெருந் தீப்போலச் சுட்டுக் கொடுமை செய்யும். வச்சிராயுதம் எனவும் கொள்ளலாம். "உறுதி நாளுளதாயின் வச்சிரம் உரவினார்களும் உய்வார்காண்" - (திருவெண்காட்டுப் புராணம்).

1328. கரை ஏறு நெறி - கடலிற் றள்ளினும் கரையேறக்கூடிய நெறி என்பது தொனி.

1339. "சுந்தரமூர்த்தி" - இதனினும் ஐந்தெழுத்து.

1352. சடையானுக் காளாய் - இங்குச் "சடையான்" என்னும் இழிவு புலப்படுத்தும் சொற் பிரயோகம் வியக்கற்பாலது. உலக வழக்கினும் "எவனோ சடையான் சொன்னானாம். அவன் பேச்சைக் கோட்டானாம்" என்பது காண்க.

1389. போய் - அருகு - அந்த - வெவ்வினையாளர் - அவருடன் அருகுபோய் - பக்கத்திலே சென்று எனவும் பொருள் கொள்ளலாம். அந்த வெவ்வினையாளர் என்பது வெளிப்படை.

1391. அற்றமுன் காக்கும் - அற்றம் - சமயம் - சமயத்தில் (வேண்டிய சமயத்தில்) முன்நின்று காக்கும் என்றலுமாம்.

1396. சிவிகை எனபதற்கேற்ப - வாக்கின் மன்னர் என அரசினைச் சுட்டினர். மன்னரை ஏந்திய பேற்றால் "வாய்ந்தசீர் வருணன்" என வருணனுக்குச் சீர் வாய்ந்தது.

1432. கை - கண் கரணங்கள்....இவ்வாறு பேறு எய்தும்; மெய்யும் எழுதரும் என்று பிரித்துரைத்தலுமாம்.

1434. பக்-237. எத்தினால் பத்தி செய்கேன் - எத்து - வஞ்சகம் - தந்திரம். "எத்தான் மறவாதே"; "எத்தே நின்னன்புடைமை"

பக் - 244. வானவர்க்கும் தானே அவன். தானே நாயகன் என்றலுமாம். இது மகாமகோபாத்தியாயர் ஸ்ரீ உ.வே. சாமிநாதையர் அவர்கள் உடன்பாடுபெற்றது.

பக்-250-1. அரியானை அந்தணர்தஞ் சிந்தையானை - அந்தணர் என்பதற்குத் திருக்குறள் மேற்கோளாக நான் "அறவோர்" என்றுரைத்தபோது, எங்களா சிரியர் - சூரியநாராயண சாஸ்திரியார் - அந்தணர் - இங்குத் தில்லைவாழந்தணரைக் குறிக்கின்றது என அருமை புலப்பட உரைத்தனர்.

பக்-251. பொதுநீக்கித் தனைநினைய . "மூவரென்றே யெம்பிரானொடு மெண்ணி"என்ற திரவாசகம் நினைவுக்கு வருகின்றது.

பாடல் 1442. பக்கம் 254. "பிள்ளையார் திருவார்த்தை" - என்பது பிள்ளையார் பாடிய தேவாரங்களைத் தில்லையிலிருந்த அடியார்கள் எடுத்துரைப்பக் கேட்டார்" - எனவும் கொள்ளலாம்போலத் தோன்றுகிறது. திருவார்த்தை - திருவாக்கு.

பக்-280. நீடூர்த் தேவாரம் - "நீக்காத பேரொளிசேர் நீடூரானை" "நீக்காத பேரொளி" என்பது இறைவனைப் பிரியாத தேவி" - அதிகாந்தி அம்மையக் குறிக்கின்றது எனவுங் கொள்ளலாம். திருநீடூரில் தேவியார் பெயர் "அதிகாந்தியம்மை" (நீடூர்ப் புராணம்)

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:55:55(இந்திய நேரம்)