தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


சில திருத்தங்களும் குறிப்புக்களும்
19

 

பக்-687. வரி 5. வளைவிலி - இது வளையல் விற்ற திருவிளையாடலைக் குறிக்கும்; மகாமகோபாத்தியாயர் சாமிநாத ஐயர் அவர்கள் குறிப்பு. (பழைய திருவிளையாடல்.)

பக்740 - 744. ஒருவனையு மல்லாது - ஒருவரையும் என்றிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. காரணம் (1) எதுகை - இதுவரை - கருவரை - பொருவரை. (2) திருமுறை கண்ட புரா - 15. கூற்றாயின - ஒருவரையும் கூறும்.

(மிக அருமையான பற்பல விளக்கங்களை எடுத்துக் காட்டும் தங்கள் விரிவுரை எனக்குப் பெருவிருந்தாக வுளது. சுருக்கமாக "அன்னம்பாலிக்கும்" தங்கள் விரிவுரை "பொன்னம்பாலிக்கும்...இப்பிறவியே" என மாற்றி அத்திருக்குறுந்தொகைச் செய்யுளை முடிப்பேன். - வ. சு. செ.)

II

காளியாபுரம் அன்பர்

திரு. மலையப்ப கவுண்டர் அவர்கள்

எழுதியனுப்பியது.

"நான் தங்கள் திருத்தொண்டர் புராண வெளியீட்டில் திருநாவுக்கரசர் சென்ற தலங்களைத்தலப்படமாக வரைந்து கொடுக்கவேண்டுமெனும்அவாஇருந்த தால் யாதொரு கஷ்டத்தையும் பாராது இரண்டு பாகமாக வரைந்து தங்களுக்கு அனுப்பி யிருக்கிறேன். இவைகளை நாவுக்கரசர் புராணத்தில் வெளியிடுவது நலமா யிருக்குமென்று வேண்டுகிறேன். நாவுக்கரசர் புராணத்தில் சில இடங்களில் அவரது பாடல் பெற்றவற்றுள் கீழ்க்கண்ட தலங்கள் விடப்பட்டு இருக்கின்றன. தேவாரப் பதிகங்களும் குறிப்பிடவில்லை. அடியிற்கண்ட தலங்கள் நாவுக்கரசரால் பாடப்பெற்று இருப்பதால் இவைகளின் தலக் குறிப்பு விசேடம், பதிகம் பாட்டுக் குறிப்புக்களோடு தக்க இடங்களில் வெளியிடுவது தக்க இடங்களில் வெளியிடுவது நலம் என்று எண்ணுகிறேன். அவையாவன கீழ்க் குறிக்கப்பட்டவற்றுள் தடித்த எழுத்தில் அச்சிடப்பட்டவை.1

கீழ்க்கண்டவற்றுள் மற்ற தலங்கள் திருநாவுக்கரசராலும் ஆளுடைய பிள்ளையாராலும் பாடல் பெற்றவைகள். ஆதலால் அத்தலங்களின் தலவிசேடத்தைக் குறிக்காமல் பதிகப் பாட்டுக் குறிப்போடு மாத்திரம் வெளியிடுவது நலம் என்று வேண்டுகிறேன்.

கீழ்க்கண்ட குறிப்புக்கள் நாவுக்கரசர் புராணப் பாட்டுகளிலுள்ள தலங்களோடு நாவுக்கரசர் வணங்கிச் சென்றிருக்கவேண்டும் என்று ஆராய்ந்ததில் தெரியவந்தது. தாங்களும் இவைகளை ஆராய்ந்து தெரிந்து வெளியிடுமாறு தங்களை எனது மனமார்ந்த நன்றியறிதலோடு தாழ்ந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். குறிப்புக்கள்: -

1. பாட்டு 1413

முண்டீச்சரம்

2. பாட்டு 1454

1. குரக்குக்கா;
2. அன்னியூர் (பொன்னூார்)
3. புள்ளிருக்கு வேளூர்;
4. வெண்காடு
5. சாய்க்காடு;
6. வலம்ரம்


1. இத்தலக் குறிப்புக்கள் மட்டும் இதனுடன் தரப்படுகின்றன. (பதிப் பாசிரியன்)

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 11:58:43(இந்திய நேரம்)