Primary tabs
1 கோழம்பம்;
2 மணஞ்சேரி ,
3 பந்தணை நல்லூர்;
4 கஞ்சனூர்,
5 கோடிகா;
6 மங்கலக்குடி
7 ஆப்பாடி;
8 ஆடுதுறை
9 நீலக்குடி
10 நல்லம்
1 கருவிலி;
2 அரிசிற்கரைப்புத்தூர்
3 சிவபுரம்;
4 கடுவாய்க்கரைபுத்தூர்
5 அவளிவணல்லூர்;
6 வெண்ணியூர்
1 வலிவலம்;
2 கீழ்வேளூர்
3 கன்றாப்பூர்
பயற்றூர்
1 மீயச்சூார் இளங்கோயில்;
2 வன்னியூர்
கோளிலி
1 கொண்டீச்சுரம்;
2 பேரெயில்
III
தில்லைத் திருமுறைக் கழகத் தலைவர்
திரு. ஆ. சு. கணபதிப் பிள்ளை அவர்கள்
-அண்புடன் உதவியது
திருநாவுக்கரசு நாயனாருடைய சரிதம் கூறியருளிய சேக்கிழார் பெருமான் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்னும் பதியில் வேளாளர் குலத்தில் குறுக்கையர் குடியில் நாயனார் அவதரித்ததாகக் கூறியருளினார்கள். தற்சமயம் திருவா மூருக்கு அருகில் உள்ள எரிப்பள்ளம் என்ற ஊரிலும் வளவனூர், புளிச்சப்பள்ளம், கொடூர் என்ற ஊர்களிலும் தொண்டைமண்டல வேளாளர் மரபைச் சேர்ந்தவர்களில் ஒரு பிரிவினர் வசிக்கின்றார்கள். இவர்கள் குறுக்கையர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அவ்வூர்களில் எட்டுக் குடித்தனக் காரர்களாக வாழகிறார்கள். ஊரில் உள்ள மற்றைய குடிகள் இவர்களைத் "திருவாமுரார்" என்று அழைக்கிறார்கள். இவர்கள் காஞ்சீபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிகர் அவர்களின் பரம்பரைச் சீடர்கள். இவர்கள் திருவாமூருக்கு வந்து அங்குள்ள சாத்தா துர்க்கை ஆகிய தெய்வங்களைத் தங்கள் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள். இவர்கள் குடியில் மணவினை நிகழ்ச்சிகளின்போது திருமணம் முன்கூட்டியே நிச்சயிக்கப்படுவதில்லை. திருமணத்துக்கு முதல்நாள் மணமகள் மணமகன் இல்லத்துக்கு அழைத்து வரப்பட்ட பின்பே நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது. தங்கள் குடியில் முன்பு திலகவதியம்மையாரின் திருமணம் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டு அவ்வாறு நடைபெறாமல் தடைப்பட்டு நின்று விட்டதால் தாங்கள் திருமணங்களை முன்கூட்டி நிச்சயிப்பதில்லையென்று கூறுகிறார்கள். இவர்கள் குடும்பங்களில் திருநாவுக்கரசு முதலியார் என்ற பெயர் பாட்டனுக்கும் பேரனுக்குமாக மாறி மாறிப் பரம்பரையாக வைத்து வழங்கப்படுகிறது.