தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

குறிப்புக்கள்


குறிப்புக்கள்
21

 

கவியரசு - வித்துவான் - கு. நடேச கவுண்டர், P. O. L. அவர்கள்

அன்புடன் உதவிய

குறிப்புக்கள்

வகை (25). பிணியனகல் - பிணி - முடிச்சு. முடிச்சுக்களையுடைய கயிற்றால் கட்டப்பட்ட கல்.

பாட்டு 1266. வாகீசர் - ஒன்றைக் குற்றமில்லாமல் சொல்ல வல்லவர். (அமர நிகண்டு): வளர்திருத்தொண்டு - துறக்கம் முதலிய பயன்களைத் தந்து அழிந்து போகும் ஏனைய பசுதர்மங்களைப் போலன்றி வளர்கின்றதாகிய பயனைத்தரும் திருத்தொண்டு. "பசித்துண்டு்" என்ற சிவஞான போத வெண்பாக்காண்க. வாய்மை திகழ் பெருநாமம் - நாயனாரின் திருப்பெயர் இடுகுறிப் பெயராக அமையாது அவர் நாவின் அரசாராயும் வாக்கின் ஈசராகவும் விளங்கிய உண்மை திகழ அமைந்ததாகும்.

1268. புனப்பண்ணைமணி - புனத்தில் மகளிர் விளையாட்டிடத்துள்ள மணி. பண்ணை - (சிற்றிலிழைத்தலாகிய) மகளிர் விளையாட்டு (திருக்கோவையார். 30). புனப்பண்ணை - புனலாகிய விளைநிலம் எனலுமாம். புனத்திலுள்ளோர்க்குத் தேவையற்றதாய் அவர்கள் தினை முதலிய விளைப்பதற்கு இடையூறுமாய் இருந்த மணிகளைத் தேவைப்படும் மருத நிலத்திற்குக் கொண்டு வந்த எறிந்தது நதி.

1269.மேல் எல்லாம் - விண் இடம் எல்லாம். விருந்து எல்லாம் திருந்து மனை - எல்லா வளங்களும் திருந்துமனையில் எப்போதும் விருந்து என்க. திருந்திய எல்லா மனையிலும் விருந்து எனலுமாம்.

1270.கரும்பு குறை - கரும்பு நெருங்கி வளர்தலால் சில கழிகளை வெட்டி நெருக்கம் நீக்குகின்றார்கள் என்க. புதுப் புனல்போல் - தேனின் கலப்பால் செந்நிறமும் வண்டுகளின் ஆர்ப்பால் ஒசையும் உண்டாயினமையின் கலங்கி ஆர்த்து வரும் புதுப்புனல்போலாயிற்று.

1272.நீர்க்கொழுத்து படர்ந்து ஏறும் நிலைமைய - கொடி கீழிலிருந்து மேலேறிக் கிளைத்துப் படர்ந்து தளிர்ப்பதுபோல் ஆற்று நீர் மேட்டு நிலத்துள்ள பெருவாய்க்காலில் ஏறி சிறு வாய்க்கால்களாகவும் கிளை. வாய்க்கால்களாகவும் கிளைத்துப் படந்து விளை நிலங்களில் நீர்க்கொழுந்துகளாகப் பாயும் நிலைமையன "பராரை மூலமேற் பணைகிளை வளாரெனப் பலவும் விராவியொன்றி னின்ற னந்தமாய்க் கவடுவிட்டென்னத், தராதலம் புகும்பாலியிற் பிரிந்த தன் கரைக் கண், அராவு கால்களு மவைதரு கால்களுமனந்தம்" (காஞ்சிப்புரா. திருநாட்டு. 66)

1273.மண்டி - மிகப்பருகி. மலரை மேய்ந்து பருகுவதால் குறைந்த நீர் எருமையின் பாலால் மிக்குக் கரையிலும் அலைபுரளும் என்க.

1275.பயிர்க்கு அண்வியல் இடங்கள் - பயிருக்கு அருகே யுள்ள அகன்ற இடங்களில் பல நெற்கூடுகள், என இயையும். பல என்பதை மாடத்துக்கும் கூட்டுக. பயிரும் நெற்கூடும் நிறைந்தன. மீன்கண் அளவும் வெற்றிடம் இல்லை என்க. மாறாட மருங்காடும் - பெண்கள் விரவிய மாடங்களை மயில் விரவிய மலையென முகிலும், முகில் ஏறிய நெற்கூட்டினை மலையென மயிலும் மயங்கி

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:16:32(இந்திய நேரம்)