தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


குறிப்புக்கள்
27

 

பக்கம் - 204. (3) கட்டங்கம் - கட் வாங்கம். எலும்பை நுனியில் உடையதோர் ஆயுதம். காபாலியர் தாங்குவது. பார்ப்பாரைப் பரிசழிப்பார்: தாரு காவனத்து முனிவர்களைத் தம் தன்மை கெடுத்தவர் எனலுமாம்; (4) பிசைந்த திருநீற்றர் - நீற்றைக் குழைத்தணிந்த திரிபுண்டரத்தர். "பிசைந்தணிந்த வெண்பொடி" (பிள்ளை - தேவா - திருத்தாளசத்தி).

பக்கம் - 205. (6) கா - சுமை. காவடி என்பதுபோல.

பக்கம் - 217. (7) மாத்து - மஹத்து.

1425. கிளியொடு பூவைகள் முன்பு தவம் புரிந்ததன் பயனாக நாயனாரைக் கண்டு அரகர என மொழிந்தன என்க.

1427. கழல் பேணு செல்வக்குடி - கழல் பேணுதலாகிய செல்வத்தையுடைய குடி எனலுமாம்.

1429. தலம் - உள்ளிடம்.

1432. பேறெய்துமெய் - "ஊனடைந்த உடம்பின் பிறவியே தானடைந்த உறுதியைச் சாறுமால்" - (2) என்றவிடத்துக் கூறிய "உறுதியை" எய்திய உடம்பு என்க.

பக்கம் - 237. (2) அடியவர்க்காக.....கடிந்தான்........சிவபெருமானுக்கு அடைமொழி. கருத்துடையடை.

பக்கம் - 237. (1) பாடமாட்டேன் - பாடவல்லுநன் அல்லேன் எத்தினால் பத்தி செய்கேன் - நான் எல்வாற்றால் தொண்டு செய்கேன்? ஆயினும் என்னை விலக்கேல். (5) குறிப்பு - குறிக்கோள்.

1436. வண்டல் - வெள்ளத்தில் வந்து கரை ஒதுங்கும் மண்ணும் வெள்ளம் வடிந்த பின் தேங்கி நிற்கும் மண்ணும் என்க.

பக்கம் - 240. (1) தில்லைச்சிற்றம்பலம், தரிசித்தவர்க்குப் பிறவியை நீக்கும்; அது அன்னமும் பொன்னும் பாலிக்கும். ஆனால் அதை மீண்டும் கண்டன்புற இன்னமும் பிறவியைப் பாலிப்பதில்லையே! அதனால் என்ன பயன். (4) தொந்தம் - நன்மை தீமை என்ற இரட்டை; (6) சிட்டர் - சிஷ்டர் (வட); ஒழுக்கத்து நீத்த முனிவர். (7) அடியாரை அறிவர் - அடியாரை மறவார்; நன்றியறிதல் என்பதுபோல்; (8) விண்ணிறைந்த பேரழலாய் அடிமுடி காணாமல் நின்றவன், அவை காட்டித்தில்லையுள் நிற்கின்றான்.

பக்கம் - 242. (3) ஆக்கள் - மால் விடையும் தருமவிடையும். (9) குட்டம் - ஆழம்.

பக்கம் - 251. (3) மட்டிட்ட - மண்டலாகாரமாக வியாபிக்கச் செய்து ஆட; "ஆயிரந்தோள் மன்னு கரதலங்கள் மட்டித்து" (பெரிய திருமடல் - உரை), மட்டித்தல் - தேய்த்தல்; அழித்தல். (தக்கயாக பரணி 340 உரை; முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ். 78)

பக்கம் - 254. நெதியன் - ஊழுக்குத் தலைவன்; இறைவன் "விதியானை" (திருஞான - தேவா - திருமணஞ்சேரி - இந்தளம்).

1450. அருட்பெருகு தனிக்கடல் - அருளாகிய பெருகுகடல் என்று பண்புத் தொகையாகவும் கொள்ளலாம்.

பக்கம் - 274. (1) கால் கொண்ட - இடமாகக்கொண்ட; வண்கை விரித்தாடல் - மட்டித்தாடல்; திசைதோய நீட்டியாடல், மதியக்கால் கொண்ட சடை(யையும்) வண்கை (யையும்) விரித்தாடும் என மொழி மாற்றுக.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:24:22(இந்திய நேரம்)