Primary tabs
பக்கம் - 275 (1) படையார் மழு - ஆர் - கூர்மை. குருகினம்பாளை விரிதொறும் - குருகினம்போலப் பாளை விரிந்துள்ள சோலைகளில் எல்லாம். தொறு - இடப்பொருட்டு.
பக்கம் - 282 (1) குறைவிலைப்படுங்கண் - பஞ்ச காலம். (5) இப்பாட்டு "செறாஅச் சிறுசொல்" என்ற குறளின் (1097) கருத்துள்ளது. பணையின் ஈருரி - யானைத்தோல்; (8) நிலையிலா வெள்ளைமாலை - நிலையாமையை உணர்த்தும் எலும்பு மாலை; (10) எளியனா மொழியா - பணிமொழியில்லாத.
பக்கம் - 284. (8) புரை புரையன் - புரைதொறும் புரைதொறும். அன் - தொறுப்பொருட்டு.
பக்கம் - 285. (3) வெள்ளியர், கரியர், செய்யர் - முறையே அடியார்க்கும, வஞ்சகர்க்கும், அறவாணருக்கும் எனக் கொள்க.
பக்கம் - 286. (6) கலவர் - கீழ்மக்களைச் சேர்ந்தவர். கல - கீழ்மகன் "கலராயினர் அறியா" (திருக்கோவையார்.)
பக்கம் - 296. ll. - (9) ஊரூரன் - ஊர்தோறும். lll - (1) வாலியள் - பால்யா; இளைமையானவள்.
பக்கம் - 302. lll. (1) தாயவன் - தாவியவன் - உலகளந்த திருமால. உலகமெல்லாம் ஆயவன் - உலகமெல்லாம் கலந்து நிற்பவன்.
பக்கம் - 303. (7) "முன்னை....என்னை ஞானததிருளறுத் தாணடவன் தன்னை ஞானத்தளையிட்டு வைப்பனே" (தனித் திருக்குறுந்தொகை - 2.)
பக்கம் - 307. (2) ஏழுடையான்......என்னை யாள்வதோ ரூழுடையான்" (திருக்கோவையார்).
பக்கம் - 312. குருகு - மெனமை - வயிரம். வன்மை. (5) படைத்தான் - பிரமன் - இடந்தான் - திருமால். (6) மூர்த்தி - அழகியவன்.
1466.தனயருடன்.......பண்ணினமை - உடன் என்றது மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு. இது வேறு வினையொடுப் பொருளில் வந்தது. "கன்றொடு கழுதை பாரஞ்சுமந்தது" என்பது போல.
பக்கம். 332. பொய்விரா(வும்) - விராவும் - கலந்த.
பக்கம். 333. ll. (3) விளக்கும் - திருவலகிடும். "விளக்கினார் பெற்ற இன்பம்" (தனித்திருநேரிசை),.
பக்கம். 333. lll. (1) கொல்லை - முல்லை நிலம்.
பக்கம். 334. lll. (7) பூணி எருது.
பக்கம். 338. (4) ஒருகால் கண்டு தொழுதேன் அவன் பலகாலும் நினறான் என்பதோர் நயம். (11) சிவபுரம் - சிவலோகம்.
1480.ஊர்வெண் பிறை - ஊர்தல் - உந்தியுநதி நகாதல். குழந்தை ஊர்கிறது என்பர். பிள்ளைப்பிறை என்பது நினைக.
பக்கம். 340. (3) உடல் வளையும் காலம் - காலம் வந்துவிட்டது; இனியாகிலும் என்பது இசையெச்சம்.
பக்கம். 342. (1) அவிநாசி - சத்தியமானது. என்றும் உள்ளது.
பக்கம் 343. (1) தீவணத்திருநீறு மெய்பூசி - தீப்போலும் திருமேனி மேல நீறுபூசி எனலுமாம். (2) பூத்துஆடி பிறந்து பல லீலைகள், வாலிப லீலைகள் செய்து. தீத்துஆடி - தீயின்கண் ஆடுபவன். அத்துச்சாரியை அகரம் கெட்டது. (9) சிரமம் - கூத்து. "பையரவின் சூட்டிற் சிரமபதம் நாட்டினான் சேர்வு" (திருவேங்கடமாலை).