Primary tabs
பக்கம் 345. (1) கருத்து அளவு - தைரியம். உள்ளத்தின் எல்லை. செருத்தொகுதி - போாத்திறமை யளவு. (5) நீலவுரு......திறத்தார் - "நிறங்களோரைந் துடையாய்" (திருவாசகம்).
பக்கம் - 348.(7) ஒத்து ஒவ்வாத உற்றார்கள் - மனம் ஒத்தவர் போலவே நடித்து உள்ளே வெறுப்பு வைத்து ஒழுகுவது சுற்றத்தார் சிலர் இயல்பு.
பக்கம் 353,(4) மொண்ணர் - மானமில்லாதவர். மானமில்லாதாரையும் கூாமையற்ற கத்தியையும் மொணணை என்பது நினைக.
பக்கம் 357. (8) வானவர் கோன் தோள் துணித்தது - தட்சனைப் போலவே ஓர் இந்திரன சிவனை மதியாது யாகம் செய்தபோது இறைவன் அவன் தோளைத் துணித்தான் "இந்திரனைத் தோணெரித்திட் டெச்சன் தலையரிந்து" (திருவாசகம்).
பக்கம் 358. (1) உன்னைக் காண்பது ஒன்றே கருதி இருந்தேன். நீயோ காட்சி யருளியதுடன அமையாது என் மனத்துள்ளேயும் புகுந்து தங்கினாய். பூண்டுகொண்டு ஒழிந்தேன் - இறுகப்பற்றிக்கொண்டேன். ஒழி - துணிவுப் பொருள் விகுதி. அறையோ - உன்னால் வெளிச் செல்ல முடியுமா என்று அறை கூவுகின்றேன். (2) களைகண் - விளி. அடி ஒடுங்கிவந்து அடைந்தேன் - ஒடுங்கி வந்து அடி அடைந்தேன் எனலுமாம்.
1489.எய்தரிய கையறவு - கையறவு - செய்வதரியாமை; செயலொழிவு.
பக்கம் - 361. (1) குயில் கூவ மயில் ஆலும் - வேனிற்காலமாதலால் மகிழ்ந்து குயில் கூவும்; அடர்த்தியினால் சோலை இருளாயிருப்பதாலும், தேன் மழை துளிப்பதாலும் கார்காலமென்று மகிழ்ந்து மடமயில் ஆலும.
பக்கம் 362. (2) கூழாட்கொள்ளல் - கூலியாகப் பணம் பெறாது சோறுமட்டும் பெற்றுக்கொண்டு வேலை செய்பவர்களைச் சோற்றாட்கள் என்பர். கூழ் - சோறு. கூழைமை யென்பதும் இத்தகைய சுதந்திரமற்ற அடிமைத்தன்மையே குறிக்கும் எனலுமாம். (5) ஏதென்போர்க்காதனாய அகப்பாடல் - ஏதமோ செய்வோன் ஒருவன்பால்கொண்ட தொடர்பால் அவன் செய்வன அறமல்ல என்று அறிந்திருந்தும கடமைப்பட்டுள்ள காரணத்தால் அவனுக்காகப் போரிடல்., சிங்கமுகன், கும்பகர்ணன், வீடுமர் முதலியோர் சரிதம் காண்க.
1490.மார்பு ஆரப் பொழிகண்ணீர் மழை -ஆர - நன்கு திளைக்க வேனிலால் வெம்பிய வெற்பின்மேல் கார்காலத்துப் பெருமழை பொழிந்து குளிர்விப்பதுபோல மனவெம்மை தீரப் பொழிந்த இன்பன்கண்ணீர் என்க. வெற்பு உறிஞ்சிக் குளிர்ந்தபின் மிக்க நீர் அருவியாக ஓடி வழிவதுபோல் நெஞ்சம் குளிர்ந்தபின் மாாபில் வழிவதே மழைவாரும் திருவடிவு என்க. மதுரவாக்கின் சேர்வாகும் திருவாய் - பேரரசன்பால அரிய பொருள்கள் வந்து திரள்வதுபோல் நாவரசர்பால் மதுரவாக்குக்கள் தாமாகவே வந்து வந்து புகலடைந்தன என்க. சேர்வு - புகலிடம்; வாழுமிடம். செம்பெற்றாள் - குற்றமற்ற - ஞானம். ஞானமே சோர்வான திருமனம் என்க.
பக்கம் 367. V. (1) ஓடு இள வெண்பிறை - உலவுகின்ற பிள்ளைப்பிறை எனலுமாம். "நிலவுலாவிய நீர்மலிவேணியன்" (1); -(2) நரகரைத்தேவு செய்தன் - கண்ணப்பநாயனார் வரலாறுமாம். "கானலைக்கும்மவன் கண்ணிடந்தப்ப வானளிக்குந் தவத்தேவு வைத்தானிடம்" (பிள்ளை - தேவா); -(4) அம்பர் உரியான் - ஈர்உரி அம்பரத்தான் என விகுதி பிரித்துக் கூட்டுக.