தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


30
குறிப்புக்கள்

 

பக்கம் - 368.(10) சுடர்விடு....உள்ளத்தான் - இது மகாநாராயணோப நிஷத்துக் கருத்து. "பொறுத்திருந்த புள்ளூர் வானுள்ளாகி யுள்ளிருந்தங்குள் நோய் களைவான் தானாய்" (தாண்ட - கருகாவூர்).

பக்கம் - 368. Vl. (2) இறகின் தூவல் - ஒருபொருட் பன்மொழி. (3) மாயப்போர் - நகைத்தெரித்தல், விழித்தெரித்தல் முதலியன எனலுமாம். (5) பாங்கான ஊர்க்கெல்லாம் செல்லும் பரமனார் - "இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி" (திருவெம்பாவை). (7) போழொத்த வெண்மதி - பனையின் குருத்தோலை ஒத்தபிறை. போழ் = பனையோலை.

பக்கம் - 370. Vlll. (4) சுபத்தர் - சு+பக்தர்; நல்ல பக்தர்கள். (5) அரட்டர் - குறுநில மன்னர், குறும்பர். (7) தேவர கண்டன் - தியாகேசரின திருநாமங்களுள் ஒன்று. கொண்டி - அடங்காதவள். (8) தவனி - தவிக்கின்றவள்.

பக்கம் - 374. (1) அயிராவணம் - கயிலையில் உள்ள யானை ஒருவனை யானை என்பது காதற்கிளவி. ஆதலின் இறைவனை விருப்பினால் அயிராவணமே என்றார் எனலுமாம்.

பக்கம் - 376. பகன் என்ற சூரியனது கண்ணைப் பிடுங்கியதுமாம்.

பக்கம் - 377. (4) நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் - போகியாய், யோகியாய், அரசாள்வானாக, ஐயமேற்பானாக, எல்லா நடைகளையும் கொண்டவன் எனலுமாம். (5) ஆனம் - ஆ "னம்" எழுத்துச் சாரியை. (6). நாமனையும் வேதத்தார் தாமே - வேதத்தை நாவால் மனைந்தார் தாமே. மனைதல் - வனைதல்; உண்டாக்குதல். ம. வ. போலி.

1492. நான் மறைநூல் பெருவாய்மை நமிநந்தியடிகள் - நான்கு வேதங்களையும் கற்றவரும் வாய்மையிற் பெயரிவருமாகிய நமிநந்தியடிகள் எனலுமாம். "நாவியல் சீர் நமிநந்தியடிகள்" (பிள்ளை - தேவா - திருக்கோளிலி). பரமர்..பாடி - இறைவனைப்பாடும் பதிகத்தில் உடன் வைத்துப் புகழப்பெறும் பெருமையுடையவர் என்பது காண்க. அணி வீதிப்பணி உழவாரத் திருப்பணி.

பக்கம் - 383. (3) படிமக்கலம் - அழகு செய்தற்குரிய பொருள்கள் படிமம்+கலன். (இறையனார் - கள - உரை). பூமாலைகளும், பொன்னணிகளும் படிமக்கலங்களே ஆயினும் ஆரூரிறைவர் படிமக்கலம் விரும்புவாரானால் அவருக்கு நாம் சொன்மாலைகளாற் படிமக்கலம் சாத்தித் தொழுவோம் மடநெஞ்சமே. "அருச்சனை பாட்டேயாகும்" ஆதலால். (10) தட அழல் - தடா - அழல் - தாட என்னும் பாத்திரத்துள்ள நெருப்பு. தோள் அம் குலம் - அழகிய தோள்களின் கூட்டம்.

1493.கார் ஆரும் கண்டத்தர் - கருமை பொருந்திய நஞ்சு உண்ட கழுத்தினர். மேகம் போன்ற கழுத்து எனலுமாம்.

ஆராத.....மீண்டும் அணைந்தார் - திருவாரூரின் மேல் வைத்த பெரும்பற்றினால் மீண்டும் அங்கே வந்து சேர்ந்தார்.

திருவலிவலம்

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

நல்லான்கா ணான்மறைக ளாயி னான்கா
         ணம்பன்கா ணணுகாதார் புரமூன் றெய்த
வில்லான்காண் விணணவர்க்கு மேலா னான்காண்
         மெல்லியலாள் பாகன்காண் வேத வேள்விச்

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 12:27:26(இந்திய நேரம்)