Primary tabs
குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரண்மணிக் கமலக்கண் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே.
- நம்பி - புன்கூர் - 4
4.
அணிகொ ளாடையம் பூணணி மாலை
யமுது செய்தமு தம்பெறு சண்டி
இணைகொ ளேழெழு நூறிரும் பனுவ
லீன்ற வன்றிரு நாவினுக் கரையன்
கணைகொள் கண்ணப்ப னென்றிவர் பெற்ற
காத லின்னரு ளாதரித் தடைந்தேன்;
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ்
செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
- நம்பி - நின்றியூர் - 3
திருவிசைப்பா
அல்லியம் பூம்பழனத் தாழர்நா வுக்கரசைச்
செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்றில்லைக்
கொல்லை விடையேறி! கூத்தா டரங்காகச்
செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே.
- பூந்துருத்தி - நம்பிகாடநம்பி - கோயில் - 3
பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி
நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சினு ணிறைந்துநின் றானை
வேடலங் காரக் கோலத்தி னமுதைத் திருவீழி மிழலையூ ராளுங்
கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக் கெழுமுதற் கெவ்விடத் தேனே.
- சேந்தனார் - திருவீழிமிழலை - 12
பதினொராந் திருமுறை
1.திருத்தொண்டர் திருவந்தாதி பாசுரங்கள் மேலே புராணத் தொடக்கத்திற் றரப்பட்டுள்ளன.
2.
‘பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற
நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழா
னேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின்மிழலைக்
கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே.
- நம்பியாண்டார்நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி - 80
3.
இலைமா டென்றிடர் பரியா; ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும்
நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்; நீள்சன் மக்கட லிடையிற்புக்
கலையார்; சென்றர னெறியா குங்கரை யண்ணப் பெறுவர்கள்; "வண்ணத்தின்
சிலைமா டந்திகழ் புகழா மூருறை திருநா வுக்கர!" சென்போரே.
4