தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


54
புராணப் பாடற்றிரட்டும்

 

பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
றெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே.

1

குறைந்த திருநேரிசை

வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுட்
சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ
இன்றுளேன் நாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே.

1

ஆருயிர்த் திருவிருத்தம்

எட்டாந் திசைக்கு மிருதிசைக் கும்மிறை வாமுறையென்
றிட்டா ரமரர்வெம் பூச லெனக்கேட் டெரிவிழியா
ஒட்டாக் கயவர் திரிபுர மூன்றையு மோரம்பினால்
அட்டா னடிநிழற் கீழதன் றோவென்ற னாருயிரே.

1

24. திருப்புகலூர் - பொன்னும் மணியும் புல்லும்வேறுபாடின்றிக்கண்டது

- புராணம்

1681.

அந்நிலைமை தனிலாண்ட வரசுபணி செய்யவவர்
நன்னிலைமை காட்டுவார் நம்பர்திரு மணிமுன்றி
றன்னில்வரு முழவாரா நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்க வருள் செய்தார்

416

1682.

செம்பொன்னு நவமணியுஞ் சேண்விளங்க வாங்கெவையு
மும்பர்பிரான் றிருமுன்றி லுருள் பருக்கை யுடனொக்க
வெம்பெருமான் வாகீச ருழவாரத் தினிலேந்தி
வலபலர்மென் பூங்கமல வாவியினிற் புகவெறிந்தார்.

417

25. திருப்புகலூர் - அரம்பையரை இருவினைகளின் வடிவாகக் கண்டது

- புராணம்

1685.

கற்பகப்பூந் தளிரடிபோங் காமருசா ரிகைசெய்ய
வுற்பலமென் முகிழ்விரல்வட் டணையோடுங் கைபெயரப்
பொற்புறுமக் கையின்வழி பொருகயற்கண் புடைபெயர
அற்புதப்பொற் கொடிநுடங்கி யாடுவபோ லாடுவார்.

420

1687.

இத்தன்மை யரம்பையர்க ளெவ்விதமுஞ் செயல்புரிய
வத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா வன்புருகு
மெய்த்தன்மை யுணர்வுடைய விழுத்தவத்து மேலோர்தஞ்
சித்தநிலை திரியாது செய்பணியின் றலைநின்றார்.

422

1688.

 இம்மாயப் பவத்தொடக்கா மிருவினைக டமைநோக்கி
"யும்மாலிங் கென்னகுறை யுடையேன்யான் றிருவாரு
 ரம்மானுக் காளானே னலையேன்மி னீ"ரென்று
"பொய்ம்மாய்ப்பெருங்கடலு" ளெனுந்திருத்தாண்டகம்புகன்றார்.

423

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:14:48(இந்திய நேரம்)