தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


60
திருநாவுக்கரசு நாயனார்

 

மாயூரப் புராணம்

பெறுமணி நிறத்த மைத்தும் பிறங்குபொன் னுடம்பிற் போர்த்து
முறுபெருங் காவல் பூண்டோர்ந் துறங்குமா யவன்போ லாது
பெறுமணி பொன்னெ லாங்கைப் பேருழ வாரத் தாற்சேர்
வுறுபுறும் விட்டா னந்த வுறக்கஞ்செய் பவர்தா ளுள்வாம்.

31

உறையூர்ப் புராணம்

கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையுங் கவின்வெண் ணீறுஞ்
சிந்தையிடை யறாவன்புஞ் சிவஞானம் பழுத்தொழுகு செய்யவர்யுந்
தந்தையொடு தாயிலான் றிருவடிதை வருமனழந் தாரைக் கண்ணு
நிந்தையறு முறைத்துறவு முடையபிரா னடிபணிந்து நீடு வாழ்வாம்.

32

திருக்குறுக்கைப் புராணம்

இருளென்று சொலத்திரிவார் மனம்வேவ நீற்றறையு ளிருந்து முற்றேம்
வெருளென்று துயர்க்கடலு ளவரழுந்தக்கருங்கடற்கண் மிசைமி தந்து
மருளென்று மாறாத வெண்ணீறுங் கண்மணியு மைந்தெ ழுத்தும்
பொருளென்று தெரிவித்த புண்ணியவா கீசர்பதம் போற்றி வாழ்வாம்.

33

தனியூர்ப் புராணம்

முகத்தின்மண் முழுதி டந்து முன்னவன் பாதங் காணா
னகத்தினா ணடைய வங்கை யலர்செறி யுழவா ரத்தி
னிகத்தின்மண் மேலி டந்தவ் விறையடி தலைமேற் சூட்டச்
சுகத்தினல் லூரிற் பெற்ற தூயரைத் துதித்து வாழ்வாம்.

34

சூத சங்கிதை

பரசிவமென் றடியவரைப் பகருமறை களிதூங்கப் பலரும் போற்றப்
பிரசநறுங் கடுக்கைமுடி யப்பரன்போல் விடநுகர்ந்து பெயராச் சீற்றப்
புரிசைநெடுங் களிற்றினைவென் றெழுவிடை வென்முழுவிடை சூல்பொலியக் கொண்ட
வரசுதிருப் பாதமலர் பரசுமெய்ப் போதமுறீஇ யமைந்து வாழ்வாம்.

இதிகாசம் : - சிவரகசியம்

கதிரு லாவிய சபைதொறுங் காலொன்று தூக்கி
யதிர வீசிநின் றாடிய தாண்டவத் தவர்க்கே
மதுர மாத்திருத் தாண்டகச் செந்தமிழ் வகுத்த
சதுர னாவினுக் கரையன்றன் சரணமே சரணம்.

36

சாத்திரங்கள் : - சைவ சமயநெறி

பரித்தரிப்பாம் பாசம் பரமசிவன் பாதந் - தரித்துயர்ந்த வாகீசர் தாள்.

37

பரமத திமிர பாநு

தரித்திடுவா வெம்முட் சிவனடிதன் னுச்சி - பரித்தசொல் வேந்தன் பதம்.

38

சங்கற்ப நிராகரணம்

வாக்கியலி னாலே மறைவனத்து வன்கதவை - நீக்கினன்றா ணீங்காதென் னெஞ்சு.

இத்தோத்திரங்களைத் தொகுத்துதவியவர் அன்பர் திருத்துறையூர் - K. ஆறுமுக நாயனார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:27:07(இந்திய நேரம்)