தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


தோத்திரத்திரட்டு
59

 

கருவூர்ப் புராணம்

குழிமால் யானை தாழப் பிணித்தகற் றூணந் தாழா
தாழிவாய் மிதப்ப மேலா மைந்தெழுத் துணர்வி னோங்கிக்
காழிவாழ் ஞானம் பூத்த கவுணியர் கொழுந்தை நட்ட
வாழிவா கீசர் வாச மலர்ப்பதம் வணங்கல் செய்வாம்.

23

திருச்சுழியற் புராணம்

புல்லோடுந் தழையோடும் பூசிப்பார் தமக்கெதிரே
வல்லோடுந் தனத்துமலை மகளோடு வருவானைச்
சொல்லோடும் பொருளோடுந் துயரோடும்படி பாடிக்
கல்லோடு மிதந்தானைக் கருத்தோடும் பணிகுவமாம்.

24

திருக்குற்றாலப் புராணம்

திருநீற்றை மெய்யழுத்தி யஞசெழுத்தை நெஞ்சழுத்திச் சிலைக்கை மார
னுருநீற்றும் பெருமானை யுறவழுத்திச் சமணரெனு மொன்னார் மூட்டும்
பொருநீற்றுக் குடவரையுங் கடகரியும் விடவரவும் புறங்கண் டாழிக்
கருநீத்தங் கடப்பவொரு கற்றோணி யுகைத்தானைக் கருத்துள் வைப்பாம்.

25

மருதவன புராணம்

வடமருவு தென்னிழலிற் கருணைவடி வாய்விளங்கு வரதன் போல
விடமமிர்த மெனப்பருகிச் சூலந்தோண் மிசையேற்று விடைமேற் கொண்டு
தடமருவு தரணியிடைத் திகழ்ந்திடுவா கீசர்பத சரோரு கத்தைத்
திடமுறுமன் பொடுதினமுஞ் சிந்திப்போந் துயர்களெல்லாஞ் சிந்திப் போமால்.

திருப்பெருந்துறைப் புராணம்

பாலிடை நஞ்சங் கண்டு பதைபதைத் தோடி யோர்பால்
நூலிடை யவருண் பாக்கு நுவன்றமா லயனுண் ணாணப்
பாலிடை நஞ்சங் கண்டு பதைப்பின்றித் தாமுண் டோர்பால்
நூலிடை யவரே யென்னப் பொலியுநோன் மையர்தாள் போற்றி.

27

காசி ரகசியம்

அருப்பிள முலையாள் பாகத் தண்ணலர் ரினிது மேய
திருப்புக் லூருக் கப்பேர் யோகமே யென்று செப்பப்
பொருப்புமுள் ளுருகப் பாடிப் புகுந்துபே ரின்பந் துய்த்த
விருப்புறு புகழ்சா னாவின் வேந்தர்தாள் வணக்கஞ் செய்வாம்.

28

திருநாகைக்காரோணப் புராணம்

எழுபது வெள்ளஞ் சேனை யெடுத்திடு பலகற் கொண்டு
செழுமணிப் பரவை யொன்றே கடந்தவெஞ் சிலையோ னாண
வழுவம ணிடுகல் லொன்றான் மறிகடல் பிறவி வேலை
முழுவதுங் கடந்த வெங்கண் முதல்வனுக் கன்புசெய்வாம்.

29

திருக்குடந்தைப் புராணம்

ஒருகவி மீட்பான் காலற் கோலையொன் றெழுதி யச்சம்
பெருகவுந் தோற்றி யுய்த்த பெருஞ்சிலை யிராம னாணத்
தருகவப் பூதி மைந்தன் றனையெனக் கால காலற்
கருகலில் பதிகம் பாடி யருளினோற் கன்பு செய்வாம்.

30

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:26:56(இந்திய நேரம்)