தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


58
திருநாவுக்கரசு நாயனார்

 

பேரூர்ப் புராணம்

விஞ்சை கற்பன வேறிலை விடையவன் பதங்க
ளஞ்சு மேயென வறியவெவ் வுலகுங்கற் புணையா
நெஞ்சு துட்கெனு நெடும்புனல் வேலையும் பிறவி
வஞ்ச வேலையு நீந்திய மன்னனைப் பணிவாம்.

15

திருவானைக்காப் புராணம்

கொண்ட லாடிய விழிகளுங் கோலவெண் ணீற்று
வண்ட லாடிய மேனியு மல்குமா னந்த
முண்ட தாங்கெதி ரெடுத்தென வோதுசெம் பாட்டுங்
கண்டு கேட்டரு ணாவினுக் கரசினைக் கலப்பாம்.

16

திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்

திரையேற விட்டகற்றூண் புணர்ப்பறச்சொற் றுணைப்பதிகந் திருந்தப் பாடி
விரையேற விட்டநறை யிதழிமுடி யரனருளால் வென்றி மேவ
விரையேற விட்டசம ணறவுயிர்கள் பவக்கடனின் றென்று மேறக்
கரையேற விட்டபிரான் புகழ்விளைத்த நாவரசைக் கருதி வாழ்வாம்.

17

உத்தரகோசமங்கைப் புராணம்

தொலையாத பவக்கடல்யாங் கடத்துமெனப் பிறர்க்குணரச் சொல்வார் போல
நிலையாத புவச்சமயக் குறும்பரிறு குறப்பிணித்த நெடுங்கல் லோடு
மலையாடு பெரும்பரவை யழுந்தாதக் கன்மிதப்பா யாழி நீந்தித்
தலையாய பொருளுணர்ந்த வாகீசர் மலர்ச்சரணஞ் சரண மாதோ.

18

கடம்பர் கோயிற் புராணம்

ஞானந்தங் கருணீருண் டமண்பாழி யிடித்துவினை கறுத்தெஞ் ஞான்று
மீனந்தங் குலகாசைக் கடுங்கோடை யிரிந்தோட வெம்மான் சைவத்
தானந்தங் கருட்செல்வந் தழைத்தோங்கத் தாண்டகச்சீர்ப் பதிக மென்னு
மானந்தம் பொழிமுகிலை யகமலரத் தொழுதுவினை யகன்று வாழ்வாம்.

19

சிவராத்திரி புராணம்

காவரசு மலரயன்மால் கடவுளர்க்காச் சென்றமர்செய் காம னாமைம்
பூவரசு படவிழித்துப் புனவேங்கை யத்தியதள் புனைந்து போர்த்த
தேவரசு மனமகிழத் திருப்பதிக மிசைத்தமிழிற் சிறக்கப் பாடு
நாவரசு பதம்பரசு நமக்குயர் பொன்னாடரசு நல்கு மன்றே.

20

சாந்தகணேச புராணம்

அற்படு மிடற்றின னருளினா லொரு - கற்புணை யாகமாக் கடல் கடந்தவன்
நற்பெயர் தன்னையே நவிறி வுள்ளநீ - பற்பல பிறவியாம் பரவை நீந்தவே.

21

திருவாப்பனூர்ப் புராணம்

மண்ணாசை பொண்ணாசை மூன்றுநீத்து
         மனத்தாசை யறவெறிந்தா னந்த நீர்பாய்
கண்ணாசை சிவபெருமான் காட்சிக் காக்கிக்
         கருத்தாசை யவனருட்கே கைம்மா றாக்கி
யுண்ணாசை மருந்தனையார் புகலூர் மன்னு
         முழவாரப் படையாளி யுருகிப் பாடும்
பண்ணாசைத் திருநாவுக் கரையன் பாதம்
         பத்திபழுத் தொழுகநெஞ்சிற் பதித்து வாழ்வாம்.

22

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:21:05(இந்திய நேரம்)