தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


68
பெயர் விளக்கம்

 

திருஞானசம்பந்த நாயனார் - ஆளுடைய பிள்ளையார் - 1496; சிவக்கன்று - 1535; ஞானசம்பந்தப் பிள்ளையார் - 1499; புகலி ஆண்டகையார் - 1523; காழியர்கோன் - 1498; வண்டமிழா லெழுதுமறை மொழிந்த பிரான் - 1445; சண்பையர் நாதன் - 1502; உடைய மறைப்பிள்ளையார் - 1442; பிள்ளைார் - 1442; உடைய பிள்ளையார் - 1553; ஞானப் பிள்ளை - 1515; ஞான முனிவர் 1534; தமிழ்விரகர் 1537; ஞானக்கன்று - 1550; மைம்மலர் கண்டத் தண்டர் பிரானார் மகனார் - 1501; மெய்ப்பொருண் ஞானம் பெற்றவர் - 1506; ஆழித்தோணிபுரத்தரசர் - 1532; திருமாமகனார் - 1525; இமயப்பாவை திருமுலைப்பால் தேசமுய்யவுண்டவர் - 1525; தென்புகலிக் கோ - 1529; பிரமபுரத் திருமுனிவர் 1666; புரமெரித்தார் திருமகனார் - 1666; தாழிவரும் பெருந்தகை - 1443; திருஞானமா முனிவர் - 1661; இருந்தவத்தேர் - 1664; ஞானத்தலைவர் - 1665; புகலி அந்தணனார் - 1660; சண்பைநகர் மறையவனார் - 1656; புகலி வேந்தர் - 1549; மலையாடிருமுலையிற் கறந்த ஞானங் குழைத் தமுதுசெய்த புகலிக் கவுணியர் - 1536; புகலி வள்ளலார் - 1544; வேணுபுரி அந்தணாளர் - 1550; கதவந் தொண்டுறைக்கப் பாடியடைப்பித்த தழைத்த மொழியார் - 1545; சண்பைத் திருமறையோர் - 1551; ஞானபோனகர் - 1558.

திருத்தலையாலங்காடு 1528, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்ம் 446.

திருத்தினைநகர் 1400, நடுநாட்டுத்தலங்களுள் ஒன்று; தலவிசேடம் I பக்கம் 276.

திருத்துருத்தி - திருவேள்விக்குடி 1455, துருத்தி, குத்தாலம் என வழங்கப்படும் தலம்; காவரியி னிருகரைகளிலும் எதிர் எதிராயுள்ள இரண்டு தலங்கள். பகலில் திருத்துரத்தியிலும், இரவில் திருவேள்விக்குடியிலுமாக, இறைவர் விளக்கம்பெற வீற்றிருப்பர் என்பது வரலாறு. இரண்டும் ஒரு தலமாகக் கருதப்படும்; தலவிசேடம் பக்கம் 288.

திருநல்லூர் 1461, 1478, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 306.

திருநள்ளாறு 1505, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 407.

திருநறையூர் 1481, சோழநாட்டுத் தலம்; பக்கம் 348.

திருநாகேச்சரம் 1457, சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று; தலவிசேடம் பக்கம் 303.

திருநாகைக்காரோணம் 1556, சோழநாட்டுத் தலம்; பக்கம் 491.

திருநாலூர் 1481, சோழநாட்டுத் தலம்.

திருநாவுக்கரசு நாயனார் - திருநாவுக்கரசு - இறைவர் நாயனாருக்கு அருளிய பெயர் - 1266 - 1276 - 1339 - 1379 - 1389 - 1398 - 1403 - 1446 - 1448 - 1499 - 1503 - 1543 - 1552 - 1577 - 1586 - 1599 - 1633 - 1560 - 1663 - 1666; வாகீசர் - நாயனார் முன்னை நிலையில் முனிவராயிருந்த நிலையின் பெயர் என்பது வரலாறு- 1266 - 1449 - 1466 - 1515 - 1521 - 1532 - 1540 - 1555 - 1576 - 1658 - 1664 - 1665 - 1681; வாகீசத்திருமுனி - 1412; வாகீசத்திருவடி - 1374; வாசீசத் திருமுனிவர் 1474. மருணிக்கியார் - நாயனாருக்குப் பெற்றோர்களிட்ட பெயர் - 1282 - 1294 - 1297 - 1300 - 1330; அப்பர் - 1447 - 1451 - நாயனாருக்கு ஆளுடையபிள்ளையார் இட்ட பெயர்; சொல்லினாதர் - 1502 - கலைமொழிக்கு நாதர் - 1538; ஞான அரசு - 1564; தமிழ் வேந்தர் - 1597 உழவாரப் படையாளி - 1597; தொல்கலையின் பெருவேந்தர் - 1608; கலைவாய்மைக் காவலனார் 1612; நாவின் மொழிக்

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:45:05(இந்திய நேரம்)