Primary tabs
கிறை - 1340; பொருண்மொழியின் காவலர் - 1401; தமிழாளியார் - 1625; இன்றமிழீசர் - 1403; இன்றிமிழ்க்கு மன் - 1415; தவமுன்...தமிழிறை - 1425; வாக்கின் மன்னவனார் - 1644; மெய்ப்பொருடோர் நாவினுக்கு வேந்தர் - 1465; மொழிக்கொற்றவர் - 1467; பார்பரவும் திருமுனிவர் - 1414; பெரியோர் - 1423; அறிவிற் பெரியயவர் - 1424; பெருந்தவத் தொண்டர் - 1467; வாக்கினுக்கு வேந்தர் - 1657; கலை மொழிக்கு நாதர் - 1534; உடைய அரசு - 1662; நீண்ட சடைமுடியார்பா னிறைந்தவருள் பெற்றுடையார் - 1483; மறிகடலிற் கல்லே மிதப்பாகப் போந்தவர் - 1484; வருநாமத் தங்செழுத்தும் பயில்வாய்மையவர் - 1499; மெய்ம்மைத்தவத்து மேலவர் - 1574; சூலைமடுத்து முன்னாண்ட தொண்டர் - 1583; சொல்லுக்கரசர் - 1585; தமிழ் வேந்தர் - 1596; திண்மை மெய்த்தவர் - 1621; செம்மையோர் - 1624. போதமாதர் - 1636; மன்னுமாதவர் - 1639 - எல்லையில் தவத்தோர் - 1646; அடித்தொண்டர் - 1648; மண்பரவும் பெருங்கீர்த்தி வாகீர் - 1658; எல்லையில் சீர் வாகீசர் - 1665; செய்தவத்தோர் - 1669; அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலா வன்புருகு மெய்த்தன்மை யுணர்வுடைய விழுத்தவத்து மேலோர் - 1687; பேதமிலா வோருணர்விற் பெரியவார் - 1689; அன்புறுபத்தி வடிவான வாகீசர் - 1690.
திருநாரையூர் - 1444, சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று; நாரை பூசித்த காரணத்தால், இப்பெயர் பெற்றது. நம்பியாண்டார் நம்பி அவதரித்துப் பொல்லாப்பிள்ளையாரது திருவருள் பெற்றுச் சைவத் தெய்வத் திருமுறைகளாகிய தேவாரங்களை வெளிப்படுத்தி உலகுக்கு உதவிய தலம். பொல்லாப்பிள்ளையார் கோயில் சிறப்பு. சுவாமி - சௌந்தரேசர் அம்மை - திரிபுரசுந்தரி; பதிகம் 5; சிதம்பரத்திற்கு மேற்கில் பத்து நாழிகை அளவில் அடையத்தக்கது. நல்ல பாதை வசதியுள்ளது. வைத்தீசுவரன் கோயில் புகை வண்டி நிலையத்தினிறும் திருவோமாம்புலியூர் திருக்கடம்பூர் வழியாகவும் அடையலாம்; பெயருக்கேற்றவாறு தலம் பள்ளத்தாக்கான நிலத்தில் அமைத்திருப்பதால், மழைக்காலத்தில், எவ்வழியா யடைவதும் கடினம்.
திருநின்றியூர் 1454 - சோழநாட்டுத் தலங்களுள் ஒன்று; பக்கம் 283.
திருநீடுர் 1454 சோழநாட்டுத் தலம்; பக்கம் 280.
திருநீலநக்கர் 1507; அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்; புராணம் பார்க்க.
திருநீறு 1331, 1332, 1443, விபூதி, தெய்வ நீறு, 1551, எல்லையிலா நீறு, 1553, நலம்பெருகும் திருநீறு 1593, 1664.
திருநெய்த்தானம் 1651 சோழநாட்டுத் தலம்.
திருநெல்வாயில் அரத்துறை 1419, ஈடுநாட்டுத் தலங்ளுள் ஒன்று; தலவிசேடம் 215 பக்கம்.
திருநெல்வேலி 1675 பாண்டிநாட்டுத் தலம்.
திருப்பாய்த்துறை 1567, சோழநாட்டுத்தலம்; பக்கம் 548.
திருப்பருப்பதம் 1613, வடநாட்டுத்தலம்; பக்கம் 587, 589.
திருப்பழனம் 1475, 1477, சோழநாட்டுத்தலம்; தலவிசேடம் பக்கம் 331.
திருப்பள்ளி எழுச்சி 1333, இறைவரது வழிபாட்டுக்குரிய காலங்களுள் முதலாவது; இறைவர் பள்ளியினின்றும் எழும்பும் நிலைபற்றி உபசரித்துக் கூறப்படுவது; பக்கம் 83.