Primary tabs
அதிகை தலம்; விரட்டானம் கோயில்; சாத்தமங்கை அயவந்தி - பனந்தாள் தாடகை யீச்சரம் - பரம்பைக்குடி ஆலம்பொழில் - என்பன போல.
திருவலஞ்சுழி 1481, சோழநாட்டுத்தலம்; பக்கம் 342.
திருவாமூர் 1277, திருநாவுக்கரசு நாயனார் அவரித்த ஊர்.
திருவாய்மூர் 1541 சோழநாட்டுத்தலம்; தலவிசேடம் பக்கம் 471.
திருவாரூர் 1470, 1668, சோழநாட்டுத்தலம்; சிறப்பாயறியப்படுவது; திருத்தொண்டத்தொகைக்குப் பிறப்பிடம்.
திருவாலம்பொழில் 1556, சோழநாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 505.
திருவாவடுதுறை 1456, 1557, சேழ நாட்டுத் தலம்; தலம் விசேடம் பக்கம் 297.
திருவாலவாய் 1667, மதுரைக் கோயில்; நகரத்துக்கும் பெயராய் வழங்கும்.
திருவானைக்கா 1566 சோழ நாட்டுத் தலம்; தேற்றமாய் அறியப்படுவது; தலவிசேடம் பக்கம் 513.
திருவான்மியூர் 1597, தொண்டை நாட்டுத் தலம்; பக்கம் 561.
திருவிடைமருதூர் சோழ நாட்டுத் தலம்; தலவிசேடம் பக்கம் 300.
திருவீழிமிலை 1515, சோழ நாட்டுத் தலம்; சிறப்பாயறியப்படுவது.
திருவெண்ணெய்நல்லூர் 1413, நடுநாட்டுத் தலம்; பக்கம் 253 (முதற்பகுதி).
திருவேட்களம் 1437, சோழ நாட்டில் காவிரிக்கு வடகரையில் இரண்டாவது தலம். தல விசேடம் 242 பக்கம்.
திருவேதிகுடி 1554, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 507,
திருவையாறு 1634, சோழ நாட்டுத் தலம். தலவிசேடம் பக்கம் 643.
திருவொற்றியூர் 1597 தொண்டை நாட்டுத் தலம்; பக்கம் 574.
திருவோத்தூர் 1581 தொண்டை நாட்டுத் தலம்; பக்கம் 537.
திலகவதியார் 1282, 1283, 1294, 1296, 1299, 1306, 1323, 1324, 1328, 1332, திருநாஹவுக்கரசு நாயனாரது தமக்கையாரும், அவரை வழிப்படுத்திய குருவும் ஆகிய அம்மையார்.
தில்லை - 1421, சிதம்பரம் பெரும்பற்றப்புலியூர்; தடுத்தாட்கொண்ட புராணத்திறுதியில் உரைத்துள்ள தல விசேடமும், பிறவும் பார்க்க.
தில்லைத்திருவெல்லை - தில்லை நகரத்துக்கு நாற்புறமும் ஒவ்வொரு காததூரத்தில் உள்ள அமைப்பு; தில்லையை வழிபட வருவோர் திரு எல்லையை வணங்கி உட்புகுதல் மரபு.
தூங்கானை மாடம் 1419, பெண்ணாகடத்தில் உள்ள கோயிலின் பெயர்.
தெலுங்கு 1615, தமிழ் நாட்டுக்கு வடக்கில் உள்ள நாடுகளுள் ஒன்று.
தேவாசிரியன் 1486, திருவாரூரின் திருத்தொண்டர் திருக்கூட்டம் நிறைந்துறையும் காவணம்; பக்கம் 354.
தொண்டநாடு 1666, பரதகண்டத்துள்ள நாடுகளுள் ஒன்று. பக்கம் II - 1400.
நந்தி 1643; திருநந்தி தேவர்.
நமச்சிவாய 1391, சிவமகா மந்திரமாகிய திருவைந்தெழுத்து; பக்கம் 192.
நமிநந்திடியகள் 1473; அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்; அவர் தம் புராணம் பார்க்க.
நிவா 1420, தில்லைக்கு வடபால்; புவனகிரிப் பக்கம் ஓடும் வெள்ளாறு; நிவாநதி என்ற பெயரால் வழங்கப்படும். இதனைச் சுவேத நதி என்பது வடவர் வழக்கு.