தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU


72
பெயர் விளக்கம்

 

பல்லவன் 1349, 1353, 1360, 1410, சோழ நாட்டை அரசு செலுத்திய அரச மரபுகளில் ஒரு மரபினன்.

பவனன் 1428, காற்றுக் கடவுள் - வாயு தேவன்; எட்டு திசைக் காவலருள் ஒருவன்.

பழையாறைவடதளி 1559, சோழ நாட்டுத் தலம்; பக்கம் 497, 503.

பழையனூர்த் திருவாலங்காடு 1606, தொண்டை நாட்டுத் தலம்; பக்கம் 579

பாடலிபுத்திரம் 1303, 1344, 1411, சமண்பள்ளிகள் மிக்கிருந்த பழைய நகரம்; அழிந்துபட்டது; பக்கம் 50 பார்க்க.

பாண்டி மாதேவியார் 1549, 1665, 1670, மங்கையார்க்கரசியம்மையார்; அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர். அவர்தம் புராணமும் பார்க்க.

பாண்டிநாடு 1667 பரதகண்டத்து நாடுகளுள் ஒன்று.

புகழனார் 1281, 1284, 1288, 1292, திருநாவுக்கரசு நாயனாரது, தந்தையார்.

பெண்ணை 1268 திருமுனைப்பாடி நாட்டிற் பாய்ந்து வளப்படுத்தும் ஆறு.

பொய்யிலி 1653, திருப்பூந்துருத்தி இறைவர் பெயர்.

பொருணூல் 1671, இறையனாரகப் பொருள் என்ற நூல்.

பொன்னி நாடு 1677, சோழநாடு.

பொன்முகலி - 1606, திருக்காளத்தி மலையடியில் ஓடும் ஆறு; புனித தீர்த்தம். கண்ணப்ப நாயனார் புராணம் பார்க்க.

பொன்னி நதி - 1520, காவிரி.

மதுரை 1667, பாண்டிநாட்டுத் தலம்; தேற்றமாய் அறியப்படுவது.

மத்திம பைதிரம் 1617, பாதகண்டத்தின் மத்தியப் பிரதேசம்.

மந்தரகிரி 1384, மாமேருமலை பக்கம் 155.

மருணிக்கியார் 1282, 1294, 1297, 1300, 1330, திருநாவுக்கரசு நாயனாருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர்.

மாதினியார் 1282, 1293, திருநாவுக்கரசு நாயனாரது தாயார்.

மாரவேள் 1686, மன்மதன்.

மாளவம் 1616 வடநாடுகளுள் ஒன்று.

முருக நாயனார் 1496, 1508, அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவர்; அவர் தம் புராணம் பார்க்க.

மேலைத் திருக்காட்டுப் பள்ளி 1556 சோழநாட்டுத் தலம்; பக்கம் 509.

வருணன் 1395, 1396 : கடலரசன்; நீாரினுக்குரிய தேவன்; எட்டுத் திக்கு காவலருள் ஒருவன்.

வாகீசர் 1266, 1449, 1466, 1515, 1521, 1532 நாயனாரது முன்னைநிலைப் பெயர் என்பது வரலாறு; வாகீசத் திருமுனி 1412, வாகீசத்திருவடி 1374; வாகீசத் திருமுனிவர் 1474.

வாரணாசி 1618. காசி; தேவார வைப்புத் தலங்களில் ஒன்று.

விண்ணிழ விமானம் 1513, திருவீழிமிழலைக் கோயிலின் விமானம்.

விழுத்தவத்து மேலோர் 1687.

வீதிவிடங்கப் பெருமாள் 1494, தியாசேகர் (திருவாரூர்)

வையமகள், 1274, பூமிதேவி; நிலத்தைப் பெண்ணாக உருவகிக்கும் மரபு.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2017 16:50:32(இந்திய நேரம்)