(இ-ள்.) வெளிப்படை. பழைய முறைமைப்படி வருகின்ற மண்ணின் துகளாகிய புழுதியேயன்றி, வேறு துகள் என்னும் குற்றமில்லாத நல்லொழுக்கத்தின் நன்மையாற் சிறந்த குடிகள் பெருகி, உச்சியிற் சந்திரன் தவழும்படி உயர்ந்த அழகிய மாடங்களையுடைய செழும்பதிகள் நிலைத்து நிறைந்து உள்ளது திருமுனைப்பாடி என்னும் வளப்பம் பொருந்திய நாடு.