தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

சிவமயம்

திருச்சிற்றம்பலம்


ஏழாம்பகுதியின் முன்னுரையும்

புராணத்தின் பின்னுரையும்

(1954)

ஆறாம் பகுதி 1-2-1953-ந் தேதி. வெளியாயிற்று. அதன்பின் 11/4 ஆண்டுகளின்
பின் (6-5-54) இவ்வேழாம் பகுதி வெளிவரத் திருவருள் கூட்டியுள்ளது. இதனுடன்
புராண உரை முழுதும் நிறைவேறுகின்றது.

இதற்கு முன் 6 பகுதிகளுக்கும், புராண எழுத்து நிறைவுவிழா வெளியீடாகிய
சிறு நூலுக்குமாக ஏழுமுறை முன்னுரைகள் எழுதநேர்ந்தது. ஆனால்
அப்போதெல்லாம் மனக்கவலையுடன்தான் எழுதினேன். புராண உரை முற்றும்
நிறைவெய்தவேண்டுமே! அதனைக் காண இறைவன் எனக்கு ஆயுளும் ஆற்றலும்
அறிவும் ஈந்தருளுவாரா? என்கின்ற ஐயம்தான் அக்கவலைக்குக் காரணம்.
காலஞ்சென்ற தமிழ்ப்பெரியார், Rev.G.U போப் ஐயர் என்னும் ஆங்கிலேயர் தமது
75-வது வயதில் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
அப்போது அந்தப் பெரிய வேலையை நிறைவேற்றும் வரைக்கும் தமக்கு ஆயுள்
இருக்குமோ என்று தம்மினும் மூத்த வயதுசென்ற ஒரு நண்பரிடம்
பேசிக்கொண்டிருந்த போது, “ஒரு நல்ல பெரிய காரியத்தைத் தொடங்கினால் அது
முடியும்வரை அவருக்குக் கடவுள் ஆயுள் கொடுப்பார்” என்று அவர் கூறினாராம்.
அம்மொழிபெயர்ப்புத் தமது 80-வது வயதில் நிறைவேறியபோது அது தமக்கு
நினைவுக்கு வந்தது என்று Rev.போப் அவர்கள் திருவாசக மொழிபெயர்ப் பின்
முகவுரையில் எழுதியிருக்கிறார். அதுபோலவே எனக்கும் ஐயம் வந்தது. அதன்
காரணமாகவேதான் புராணவிரிவுரை சில பெரும் பகுதிகள் நிறைவேறியவுடன்
அவ்வப்போது நிறைவு விழாக்களும் கொண்டாடப்பட்டன. திருநாவுக்கரசு நாயனார்
புராண நிறைவின்போது தருமபுரம் ஆதீனம் அப்போதிருந்த ஸ்ரீலஸ்ரீ
சண்முகதேசிகபரமாசாரிய மகாசந்நிதானங்களின் 10-ம் ஆண்டு ஆட்சி நிறைவு
விழாவில் 6-9-43 தேதி அம்மகாசந்நிதானங்களின் திருமுன் அவ்வுரைப் பகுதிக்கும்
அரங்கேற்றம் கொண்டாடப்பட்டது. அந்நாயனார் புராணவுரை அவர்களது
அருளாணை உதவியினால் வெளிவந்ததும் அன்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
அதுபோலவே மற்றொரு பெரும் பகுதியாகிய திருஞானசம்பந்த நாயனார் புராண
உரை நிறைவின்போதும் திருநல்லூர்ப்பெருமணம் என்னும் ஆச்சாள்புரத்தில்
அவ்வாதீனம் இப்போது எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக
பரமாசாரிய மகாசந்நிதானங்களின் அருளாணைகொண்டு 1-6-50 தேதி
திருஞானசம்பந்த நாயனாரது திருநாளில் அரங்கேற்றுவிழாக் கொண்டாடப்பட்டது.
ஆனால் அதற்குமுன்பே

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:03:04(இந்திய நேரம்)