தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நன்றி

புராணஉரை கையெழுத்துப்பணி நிறைவேறிவிட்டமையால் அதற்காக 13-7-48-ல்
ஆனியுத்திரப் பெருவிழாவின்போது சிதம்பரத்தில் ஒருவிழாக் கொண்டாடப்பட்டது.
இவையெல்லாம் பின்னே முற்றும் நிலை எவ்வாறிருப்பினும் அவ்வப்போது அந்தந்த
அளவில் இப்பேருரைப்பணி நிறைவாயினமை பற்றி அறிவித்து அடியேனதுமனம்
அமைதி அடைதற்பொருட்டும், அன்பர்களும் மன ஆவல் அமைதி கொள்ளும்
பொருட்டுமே செய்யப்பட்டன. அடியேன் இப்பெரும் பணியை எனது 58-ம் வயதில்
1935-ம் ஆண்டில்தான் தொடங்கினேன். எல்லா நற்காரியங்களுக்குப்போலவே
இதற்கும் பற்பல இடையூறுகள் ஏற்பட்டன. எனது உயிருக்கு ஆபத்தான நிலையில்
பல பிணிகளுக்கும் உள்ளாயினேன். தொடக்கத்திலேயே எனது மூக்கினுள் ஒரு
பருவந்து மிகு வருந்தினேன்: நினைவு மாறும் நிலையும் வந்தது. உலக யுத்தங்கள்
இரண்டு நிகழ்ந்தன. அதனால் காகிதமும் பொருளும் கிடைக்காத நிலையில் பல
காலம் அச்சுவேலை முற்றிலும் நின்றுவிடவும் நேர்ந்தது. இன்னும் பணமின்மை,
காகிதமின்மை முதலிய பல தொல்லைகளும் வந்தன. ஆனால் “தனக்குவமை
யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான், மனக்கவலை மாற்ற லரிது” என்னும்
முதுமொழியைக் கடைப்பிடித்துக் கொண்டு “என்செய லாவதியா தொன்று மில்லை”
என்று இறைவரது திருவருளையே சார்ந்து இடைவிடாது சலியாது முயன்று வந்தேன்.
மனக்கவலையும் மாறிற்று. மிக அரிய இத்திருப்பணியும் நிறைவேறிற்று. இம்
முன்னுரையை எவ்விதமான கவலையும் சோர்வுமின்றி எழுதுகின்றேன் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன். இறைவன் றிருவருளுக்கும் அன்பர்களுடைய
ஆசிக்கும் வணக்கம். புராண உரை நிறைவுவிழாத்தில்லைமாநகரில் ஆயிரக்கால்
மண்டபத்தில் 1954 மே மாதம் 6, 7 தேதிகளில் (ஜய-சித்திரை 24, 25, தேதிகளில்)
மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதன் விரிவு புராண இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
“அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே” என்று
பெருமகிழ்ச்சியடைகின்றேன். தில்லைவாழந்தணர்களும் சைவப் பெரு
மடத்ததிபர்களும் ஆசிர்வதித்துச் சிறப்புச் செய்தார்கள். அன்பர்கள் ஆசிகூறி
அருமைப்படுத்தினார்கள். உலகம் உவந்தது. அடியேனும் உய்தி பெற்றேன்.
ஏறக்குறையை 50 ஆண்டுகளாக அரும்பாடுபட்டு முயன்றும், அதில் 18-
ண்டுகளாகப் பற்பல இன்னல்களிடையே அச்சியற்றிப் பணியாற்றி வந்ததன்
சங்கடங்கள் எல்லாம் தில்லை அம்பலவாணன்றிருமுன்னர் ஒருநாளிலே மறைந்து
பேரின்ப வாழ்வினை அடைந்து மகிழ்ச்சிபெறச் செய்தது திருவருட் செயல். உரை
நிறைவு விழாவுக்காகச் செயற்குழு அமைத்து அது வெற்றிகரமாக நிறைவேற எல்லா
முயற்சிகளும் செய்த என் நண்பர்களுக்கும், சிறப்புச் செய்து ஆசி யருளிய
தில்லைவாழந்தணர்களுக்கும், பற்பல அரிய சிறப்புக்களும் செய்து ஆசியருளி
வாழ்த்திய சைவப் பெருமடத் ததிபர்களுக்கும், சிவஞானச் செல்வர்களுக்கும்,
வாழ்த்துப் பத்திரங்கள் வழங்கி அளவளாவிப் பற்பல சிறப்புக்கள் தந்த சமூகத்தினர்
அனைவர்களுக்கும், வாழ்த்துரை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:03:14(இந்திய நேரம்)