தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Nagakumara Kavium


- xii -
“ஆனேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும் ஆங்கத்
தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப்
போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற
நோதக வந்தன்றா லிளவேனின் மேதக”

என்னும் பாலைக்கலியின் கருத்தையும் மேற்கொண்டுள்ளன.

“கொய்ம்மலர்க் குடுமிச் சேவல் கோழிளந் தகர்போர் மூட்டி”
“ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை”

“பாய தொன்மரப் பறவைபோற் பயன்கொள்வான் பதினெண்
டேய மாந்தருங் கிளந்தசொற் றிரட்சிதான்”

“கதிர்கலம் பெய்காட்சி போலுதிர் பழம்”

என்னும் இந்நூற் செய்யுட் பகுதிகள்,

“கோட்டிளந் தகர்களுங் கொய்ம்மலர் தோன்றி போற்
சூட்டுடைய சேவலும் . . . போர்க்கொளீஇ”

“பொருவில் யானையின் பழுப்போற் பொங்கு காய்க்குலையவரை”

“முட்டிலா மூவறு பாடை மாக்களாற்
புட்பயில் பழுமரப் பொலிவிற் றாகிய”

“புதுக்கலம் போலும் பூங்கனியால்”

என்னும் சிந்தாமணிச் செய்யுட் பகுதிகளை முறையே ஒத்துள்ளன.

“வஞ்சவினைக் கொள்கலனா முடலைத்தீவாய் மடுக்கிலேன்
வரையுரூண்டு மாய்ப்பே னல்லேன்”

“மழலைதேறாச் சிறியனா மொருமதலை கையிற்கொண்ட
செம்பொன்மணி வள்ளம்போற் றேவர் யார்க்கும்
அறிவரியாய் சிறியேனை யௌ¤வந்தாண்ட வருமையறியேன்”

“முன்னா முதுபொருட்கு முன்னா முதுபொருளாய்ப்
பின்னாம் புதுமைக்கும் பின்னாகும் பேரொளியாய்"

“மண்ணாய்ப் புனலாய்க் கனலாய் வளியாகி
விண்ணா யிருசுடரா யித்தனையும் வேறாகி”

என்னும் வாதவூரடிகள் பரவுவனவாகவுள்ள இந்நூற் செய்யுட் பகுதிகள் முறையே,

“தீயில் வீழ்கிலேன் றிண்வரை யுருள்கிலேன்”

“மையிலங்குநற் கண்ணிபங்கனே வந்தெனைப்
      பணிகொண்டபின் மழக்
கையிலங்குபொற் கிண்ண மென்றலா லரியையென்
      றுனைக் கருதுகின்றிலேன்”

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:14:34(இந்திய நேரம்)