Primary tabs
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”
“வானாகி மண்ணாகி வளியாகி யொளியாகி
ஊனாகி யுயிராகி யுண்மையுமா யின்மையுமாய்”
என்னும் திருவாசகப் பகுதிகளைச் சிந்தனையிற்
கொண்டு இயற்றப்
பெற்றனவாகும்.
இனி, இவ்வாசிரியர் ஒன்பான் சுவையும் விஞ்சவும்,
பரிமான் செலவு
போற் பெருமித நடை பொருந்தவும் செய்யுளியற்றுந்
திறன் வாய்ந்தவர். நம்பி
திருவிளையாடலானது இந்நூற்கு முற்பட்டதும், பழைய
தமிழ வழக்குகளைப்
பெரும்பாலும் தழுவிச் செல்வதுமாகவும் அதன்
பயிற்சி குன்றவும், இதனையே
யாவரும் விரும்பிக் கற்கவும் செய்தது இந்நூற்
செய்யுட்களின் அழகேயெனல்
மிகையாகாது. பத்தி நலங்கனிந்து கற்பார்க்கும்
பெரும்பயன் விளைப்பதாய்,
சைவநன்மக்கள் யாவரானும் பெரிய புராணத்தை
யடுத்துப் பாராட்டிப்
படிக்கப் பெறுவதா யுள்ளது இந்நூலே.
இந்நூல் மூலமானது தமிழுக்கும் சைவத்திற்குமாகத்
தம் வாழ்க்கையை
ஈடுபடுத்திய பெரியாராகிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவல
ரவர்கள் முதலிய
பலரால் முன் அச்சிடப் பெற்றுளது. திரிசிரபுரம்
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி
சுந்தரம் பிள்ளை யவர்கள் மாணாக்கராகிய சோடசாவ
தானம் சுப்பராயச்
செட்டியாரவர்கள் இதற்கு ஓர் உரையெழுதி
வெளிப்படுத்தி யுள்ளார்கள்.
பின் அவ்வுரையையே பெரிதுந் தழுவி ஈக்காடு,
இரத்தினவேலு முதலிய«£ர்
என்பவர்களால் ஓர் பொழிப்புரை யெழுதப்பெற்று
வெளிவந்துளது.
மதுரைக்காண்ட மட்டும் மதுரை இராமசுவாமிப் பிள்ளை
யென்னும் ஞான
சம்பந்தப்பிள்ளை என்பவர்களால் வேறுபட்ட பல
பாடங்கொண்டு ஓர்
பொழிப்புரை யெழுதி வெளிப்படுத்தப் பெற்றுளது.
இவர்களனைவரும்
அவ்வக் காலங்களிற் புரிந்துவைத்த இவ்வுதவிகளைத்
தமிழ்மக்கள் யாவரும்
பாராட்டுங் கடமைப் பாடுடையராவர்.
தமிழ நூல்கள் பலவற்றையும் அழகிய முறையில்
அச்சிட்டுப்பரப்பித்
தமிழையும் சைவத்தையும் பேணிவரும்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின்
அமைச்சரும், நனவிலும்
கனவிலும் தமிழ் நலமே கருதிப்பேரூக்கத்துடன்
உழைத்து வருபவரும்
ஆகிய திருவாளர் வ. திருவரங்கம்
பிள்ளையவர்கள் ‘செட்டியாரவர்கள்
உரையுடன் கூடிய திருவிளையாடற் பதிப்பு முற்றிலும்
செலவாகி இப்பொழுது
கிடைப்பதரிதாயினமையால், நீங்கள்
இக்காலத்திற்கேற்றபடி திருத்தமான
முறைதழுவிய ஓர் உரை எழுதித்தரல் வேண்டும்’ என்று
கூறிப் பலகாலும்
என்னை வற்புறுத்தினமையால், திருவருளிருந்தவா
றென்று நான்
இவ்வுரையினை எழுதுவேனாயினேன். பல பதிப்புக்களை
ஒத்து நோக்கி,
மூலத்தின் வேறுபட்ட பாடங்களுட் சிறந்ததெனத்
தோன்றுவதை அமைத்துக்
கொண்டு பிறவற்றைப் பாட பேதமாக
அமைத்திருக்கின்றேன். இந் நூற்
செய்யுட்களின் இடர்ப்பட்ட சொற்பொருண் முடிபுகளை
ஒழுங்குபடுத்துவது,
இன்றியமையாதவும் ஒத்த கருத்துள்ளவுமாகிய பிற நூன்
மேற்கோள்களை
யெடுத்துக் காட்டி விளங்க வைப்பது முதலியவற்றில்
எவ்வளவு அருமுயற்சி