Primary tabs
ஓம்
முகவுரை
திருக்கருவைப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இச் சிறு நூல் கருவைமா நகரில் கோயில்கொண் டெழுந்தருளி யிருக்கும் சிவபெருமானைக் குறித்து அதிவீர ராமபாண்டியர் பாடியது.
அந்தாதியாவது, முன் நின்ற பாட்டின் இறுதி எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும்
பின் வரும் பாட்டின் முதலாக வர, ஈறும் முதலும் மண்டலித்து முடியப் பாடும் ஒருவகைப் பிரபந்தம்.
பண்டையத் தண்டமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்தின்படி இந்நூல் ‘விருந்து’ என்னும் வனப்பமைந்த
தொடர் நிலைச் செய்யுளாம். இது ‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’ என்ற செய்யுளியற்
சூத்திரத்தாலும், ‘விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண்டியவாற்றாற் பல
செய்யுளுந் தொடர்ந்து வரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது’ என அதற்குப் பேராசிரியர் கூறிய
உரையாலும் பெறப்படும். பிற்காலத்தார் இதனைச் சிறு காப்பியத்துள் அடக்குவர். பொருட்டொடர்பு
நோக்காது, சொற்றொடர்பு ஒன்றே கொண்டு அமைந்ததாதலின் இது சொற்றொடர் நிலைச் செய்யுளாய்
அடங்கும். ‘செய்யுளந்தாதி சொற்றொடர் நிலையே’ என்பது தண்டியலங்காரம். அந்தாதி-அந்தத்தை
ஆதியாக வுடையது; வேற்றுமைத் தொகைப் புராணம் பிறந்துப் அன்மொழித் தொகை; ‘அந்த+ஆதி’