Primary tabs
எனப் பிரிக்க. வடமொழித் தொடராதலின் ‘அந்தாதி’ எனத் தீர்க்க சந்தியாகப் புணர்ந்தது.
ஒரே வகைச் செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடரப் பாடுவதே பெரும்பாலும் அந்தாதி எனப்படும். நூற்றந்தாதி எனலுமுண்டு. மற்றிந் நூலோ, சந்தவேறுபாட்டால் பத்துவகையான செய்யுளால் நூறு பாடல்கள் அந்தாதியாகத் தொடர அமைந்தது. ஆதலின் ‘பதிற்றுப்பத் தந்தாதி’ எனப்பட்டது. பதிற்றுப்பத்து என்பது ‘பத்து+இற்று+பத்து’ எனப் பிரியும்; ‘இற்று’சாரியை. பத்தாகிய பத்து என விரிதலால் பண்புத்தொகை நிலைத்தொடராகிப் பத்தினாற் பெருக்கிய பத்து எனப் பொருள்படும். திருக்கருவைச் சிவபெருமானைக் குறித்தே இந்நூலாசிரியர் கலித்துறை யந்தாதி வெண்பாவந்தாதி என வேறிரண்டு அந்தாதிகள் பாடியுள்ளமையின், அவற்றினின்றும் இதனை வேறுபடுத்தப் பதிற்றுப்பத்தந்தாதி என்றார் எனலுமாம்.
கருவை என்பது பாண்டிய நாட்டில், ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் சாலையிடையே,
சங்கரநயினார் கோயிலுக்கு வடக்கே சற்றேறக்குறைய காத தூரத்திலும் திருநெல்வேலிக்கு
வடமேற்கே சற்றேறக்குறைய நாற்காத தூரத்திலும் உள்ள ஒரு சிவஸ்தலம். கரிவலம் வந்த
நல்லூர் எனப்படும். குலசேகர பாண்டியன் வேட்டையாடச் சென்றபோது எதிர்ப்பட்ட ஒர்
யானையைத் துரத்த, அது சிவாலயத்தை நாடி ஓடி, ஆண்டு எம்பெருமான் இருந்த புதரை வலம்
வந்து சிவகணமாகப் பெற்றமையால் இப்பெயர் பெற்றதென்பர். தஞ்சாவூர் தஞ்சை என
மருவினாற்போலக் கரிவலம் வந்த நல்லூர் என்பது