Primary tabs
கருவை என மரூஉவாகி மேன்மை யுணர்த்தும் திரு என்னும் அடைபெற்றுத் திருக்கருவை என்றாயது.
இவ்வூரில் கோயில்கொண்டெழுந்தருளியுள்ள சிவபெருமானது திருநாமம், பால்வண்ணநாதர், திருக்களாவீசர், முகலிங்கர்.
படிகலிங்கமாதலின் பால்வண்ணநாதர் எனவும், களாமரம் தல விருட்சமாதலின் திருக்களா வீசர் எனவும், திருமுகம் விளங்கித் தோன்றும் இலிங்க வடிவமாதலின் முகலிங்கர் எனவும் பெயர் எய்தியது. இலிங்கம், அவ்வியக்த லிங்கம் எனவும், வியக்த லிங்கம் எனவும், வியக்தா வியக்த லிங்கம் எனவும் மூவகைப்படும். பீடமும் இலிங்கமுமா யிருப்பது அவ்வியக்த லிங்கம். எல்லா அவயவங்களும் வெளிப்படத் தோன்றும் மாகேசுவர வடிவங்கள் யாவும் வியக்த லிங்கங்கள். முகமும் தோள்களும் வெளிப்படத் தோன்றும் இலிங்க வடிவம் வியக்தா வியக்தலிங்கம். எனவே திருக் கருவையிற் கோயில் கொண்ட இலிங்கமூர்த்தம் வியக்தா வியக்த லிங்கமாம். அம்மை பெயர் ஒப்பனை.
ஒப்பனை யம்மையுடன் வியக்தா வியக்த லிங்கவடிவமாகத் திருக்கருவைப் பதியில் கோயில்
கொண்ட சிவபெருமானைக் குறித்துப் பதிற்றுப்பத் தந்தாதி என்னும் இந் நூலைப் பாடிய
அதிவீர ராம பாண்டியர் பாண்டிய வமிசத்து அரசர்களில் ஒருவர். இற்றைக்குச் சற்றேறக்
குறைய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னே இருந்தவர். சரித ஆராய்ச்சியால் தெரியக்
கிடக்கும் பாண்டிய வமிசாவளியில் இவரே கடைசியிற் காணப்படுகிறார். பன்னூறாண்டுகளுக்கு
முன்னே செந்தமிழ் வளர்த்துச் சீருஞ் சிறப்பு முற்றிருந்த பாண்டியர் ஆட்சி, இவருடைய
காலத்