தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU-முகவுரை


 2
முகவுரை

நாகர்கோவில், விளையாட்டரங்கக் கலையரங்கில் கவிமணியின்
நூற்றாண்டு விழா நடந்த சமயம் (1976 ஜூலை 27) காலையிலிருந்தே
கவிமணியின் புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கும், கருத்தரங்கைக்
கேட்பதற்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருந்தது.
கூட்டம் வரக்கூடாது என்று எண்ணத்தோடு  ஏற்பாடு  செய்வதற்குத்
தமிழகத்தில் புகழ்பெற்ற          பேச்சாளர்கள்,  பல்கலைக்கழகப்
பேராசிரியர்கள், உள்ளூர்     பிரமுகர்கள், அன்று  ஆட்சியிலிருந்த
அரசுபிரமுகர்கள்     எல்லோருமே மேடையில் நெருக்கிக் கொண்டு
இருந்தார்கள். கவிமணியையும்    அவர் வாழ்ந்த  காலகட்டத்தையும்
அலசி எடுத்தார்  ஒருவர். இன்னொருவர் கவிமணியின்  பாடல்களை
மனப்பாடமாக ஒப்புவித்தார்.    ஆவசேப் பேச்சாளர்களில்  ஒருவர்
கவிமணிக்கு  இனிச் செய்ய     வேண்டியவை எவை   என்பதைப்
பட்டியலிட்டார். அவர் பட்டியலை வரிசையாகச் சொல்லச்  சொல்லக்
கூட்டத்திலிருந்து கைதட்டல்கள்    எழுந்தன. பட்டியலின்  முடிவில்
நீண்ட கரவோசையால் அரங்கு அதிர்ந்தது.

ஆவேசப் பேச்சாளரை அடுத்து     வந்தவர்களுக்கு அவரது
கருத்தைக் குறிப்பிட வேண்டிய      கட்டாயம் வந்தது. அவர்களும்
அவற்றை ஆமோதித்துப் பேசினர்.            பொதுவாக எல்லாப்
படைப்பாளிகளின் நூற்றாண்டு விழாக்களிலும்     பேசிக் கரவோசை
வாங்குவதற்கென்றே தயாரிக்கப்பட்டவை தாம் இந்தப் பட்டியல்களும்.
நூற்றாண்டு விழா கொண்டாடுபவருக்குத்    தபால்தலைவெளியிடுவது,
சிலை நிறுவுதல், அவர் பேரில்       அறக்கட்டளை நிறுவி அவரை
ஆராய்ச்சி செய்தல், அவரின் படைப்புகள் எல்லாவற்றையும் ஒருசேர
வெளியிடுதல், மாவட்டம் பல்கலைக்கழகம்       எதாவது ஒன்றிற்கு
அவரது பெயரை வைத்தல் ஆகியவை தாம் இவை. கூட்டம் முடிந்த
பின்பு கலைந்து கொண்டிருந்த பார்வையாளர்களும்   பெரும்பாலான
நம்பிக்கையுடன் இதைப் பேசிக்கொண்டு போனார்கள்.

அப்போது இளைஞர்களாக இருந்தநாங்கள்விளையாட்டரங்கின்
மூலையில் அமர்ந்து எல்லாவற்றையும்   கேட்டுக் கொண்டிருந்தோம்.
எங்கள் அருகே இருந்த மூத்த   பேராசிரியர் ஒருவர் “இதுபோன்ற
ஆவேசமும் ஆசையும் ஒருவகையில்        பிரசவ வைராக்கியம்,
சுடுகாட்டு வைராக்கியம்             போன்றவைதாம்; இவற்றுடன்
படைப்பாளியின் நூற்றாண்டு விழா  வைராக்கியம் என்ற ஒன்றையும்
புதிதாகச் சேர்த்துக் கொள்ளலாம்”      என்றார். அப்போது அவர்
பேசியதன் அர்த்தம் எங்களுக்கு      நன்றாகவே புரிந்தது. அன்று
நாங்கள் கவிமணி அரசுடைமை ஆவார்; அவரது


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 03:18:57(இந்திய நேரம்)