தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Gitanjali


அணிந்துரை
 
 
 

மு.வரதராசன்
துணைவேந்தர்

 

மதுரை பல்கலைக்கழகம்
மதுரை-2

திரு. பாவலர் பேகன் அவர்கள் இயற்றிய தமிழ்க்
கீதாஞ்சலியைப் படித்து மகிழ்ந்தேன். உலகப்
பெருங்கவிஞராகத் திகழ்ந்த இரவீந்திரநாத் தாகூரின்
உயரிய படைப்புகளைத் தமிழர் படித்துணர்ந்து மகிழும்
வகையில் இந்நூலை ஆக்கித் தந்துள்ளார் பாவலர்
பேகன். இது மொழி பெயர்ப்பு அன்று, மொழியாக்கம்
என்று அவர் ‘காதற்பரிசு’ என்ற தம் மற்றொரு நூலைப்
பற்றிக் குறிப்பிட்டது இந்த நூலுக்கும் பொருந்துவதாகும்.
ஆகவே ‘தமிழ்க் கீதாஞ்சலி’ என்னும் இது பாவலர்
பேகன் அவர்களின் சொந்தப்படைப்பாக அமைகிறது.

சில பாடல்கள் பாக்களாகவும், வேறு சில
பாவினங்களாகவும் உள்ளன. நடையில் எளிமை அணி
செய்கிறது. சொல்லமைப்பில் தெளிவு திகழ்கிறது.
ஆசிரியரின் உள்ளம் நாட்டின் பண்பாட்டிலும் தத்துவத்
தெளிவிலும் ஈடுபாடு கொண்ட இயல்பு புலனாகிறது.
அவர்தம் நல்முயற்சி பாராட்டுக்கு உரியதாகும்.


மு.வரதராசன்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 10:27:14(இந்திய நேரம்)