தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அவற்றைப் பார்வையிட்ட முதுபெரும் தமிழறிஞர்கள் டாக்டர்
மு.வரதராசனார். பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார் வாழ்த்துரை
வழங்கிக் கவிஞருக்குப் பெருமை சேர்த்தனர்.

அப்பெருமக்கள் மொழிந்த பொன்னுரைகளே தமிழ் நெஞ்சங்களை
விழிப்புற வைத்தன. அவர்களை நினைந்து நன்றி பாராட்டுகிறேன்.

இந்த நூல் முற்றிலும் புதிய பதிப்பு. முன்னர் வெளிவந்த தொகுப்பு
நூலில் இடம்பெறாத கவிதைகள் பல இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

நூலுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில், சான்றோர் உரையும்
இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், கவிதை உருவான காலத்தைக் குறிக்கும் ‘படைப்புப்
பட்டி’யலும், பண்பு வாரியாகக் கவிதைகளை அறிய உதவும் 
பொருளடக்கமும் இடம் பெற்றுள்ளன.

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளை ஏடுகளிலிருந்து
எடுத்துக்கொள்ள அனுமதித்த பத்திரிகையாளர் பலருக்கும் நன்றி 
கூறுவது என் கடமை.

குறிப்பாக ‘ஜனசக்தி’ ஏட்டின் பொறுப்பாளராக விளங்கிய 
மதிப்புமிக்க தோழர் அமரர் கே.பாலதண்டாயுதம்;

‘முன்னணி’ஏட்டினைப் பாதுகாத்து வைத்து உரிய நேரத்தில்
நமக்கு உதவிய அன்புத் தோழர் ஈரோடு மு. நடேசன்.

‘மாளிகை அமைப்போம்’ கவிதையை நினைவுகூர்ந்து 
எழுதியனுப்பிய மதுரைத் தோழர் கோ. பரமேஸ்வரன்.

‘தமிழர் எழுச்சி’ கவிதைகளை அன்புடன் உதவிய பேராசிரியர்
தி.வ. மெய்கண்டார்.

அச்சேறுமுன் மெய்ப்பினைப் பார்வையிட்டுப் பிழைத்திருத்தமின்றி
வெளிவர உதவிய பேராசிரியர் திருமதி வெ. கனக சுந்தரம் மற்றும் 
கவிஞர் காவிரி நாடன்.

போன்ற அனைத்துப் பெருமக்களையும் நெஞ்சார நினைந்து நன்றி
பாராட்டுகிறேன்.

தமிழ் மக்களும், இலக்கிய ஆர்வலர்களும் கவிஞர் படைப்புகளை 
வாங்கி ஆதரிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

அன்புடன்
செ.து.சஞ்சீவி
(தொகுப்பாசிரியர்)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 10:38:12(இந்திய நேரம்)