தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam-232


  • மனோன்மணீயம்

    232

    மனோன்மணீயம்

    மேற்கோள் விளக்கம்

    I

    பழமொழி

    பக்கம்

    வரி

    1
    14
    'என் விழற் கிடமிலை'
    8
    17.18
    'எருதீன் றெனமுன மென்னகன் றென்று திரிபவ ரொப்ப'
    8
    32
    'தலைவிதி தடுக்கற் பாற்றோ?'
    9
    38
    'முதலையின் பிடிபோல்' என்பதை 'முதலையும் மூர்க்கனுங் கொண்டது விடா' என்பதனோடு ஒப்புநோக்குக.
    12
    147
    'நெருப்பையுங் கறையா னரிக்குமோ?'
    15
    39
    'எடுப்பார் கைப்பிள்ளை'
    16
    46
    'மணற் சோற்றிற் கற்றேடுதல்'
    18
    110
    'பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ?' 
    (கிளியை வளர்த்துப் பூனைக்குக் கொடுக்கவா?)
    19
    119
    'பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை?' 
    (பிள்ளையைப் பெற்றுப் பேய்க்குக் கொடுக்கவா?)
    19
    126
    'அழகிருந் தென்பயன்?' 'தொழிலெலா மழிவே' 
    (ஆளைப் பார்த்தால் அழகுபோல, வேலையைப் பார்த்தால் இழவுபோல.)
    21
    173
    'எரிமேலிட்ட இழுது'
    (அனலிற்படு நெய்போல்)
    23
    7
    'தாய்க்கு மொளித்த சூலோ?'
    (தாய்க்கொளித்த சூலா?)
    24
    37-38
    'பரிதி வந்துழி யகலும் பனியென'
    (சூரியனைக் கண்ட பனிபோல;இன்பனிக்கு இனன் என)
    25
    76
    'நேசமில் வதுவை நாசகாரணமே'
    26
    114-15
    'கன்னியா யிருப்பா யென்றும் சம்மதம்'
    27
    120
    'நான் பிடித்த முயற்கு மூன்று கால்'
    28
    169
    'புளியம் பழமுந் தோடும் போலாம்'
    31
    1
    'புத்தியே சகல சத்தியும்' 'Knowledge is Power.
    (Bacon)' 'புத்திமானே பலவான்'
    31
    9
    'பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்'
    32
    46
    'போர் வந்திடி லிவண் நேர்வந்திடும் எலாம்'
    (கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்)
    36
    39
    'ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை?' 'Necessity has no law'
    42
    226
    'கால விளம்பனஞ் சாலவுந் தீதே'(Delay is Dangerous)
    43
    260
    'அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ?'
    (கைப்புண் பார்க்கக் கண்ணாடி வேண்டுமா?)
    44
    283
    'கரும்பு கைப்பதுன் வாய்க்குற்றம்மே'
    44
    286
    'வெளுத்த தெல்லாம் பாலா' 'மின்னுவ தெல்லாம் பொன்னா'?'All that glitters is not gold'
    45
    304
    'நெருப்பாறும் மயிர்ப்பாலமும்'
    54
    9
    'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து'
    58
    113-19
    'வண்டு மலரிடை யணைய வுன் னாட்டிற் கொண்டுவிடுவரே போலும்'
    (பலாப்பழத்துக்கு ஈப்பிடித்து விடவா?)
    60
    179-80
    'அப்பந் தின்னவோ, அலால் குழி யெண்ணவோ செப்பிய துனக்கு'
    (எச்சிலை யெடுக்கச் சொன்னதா? எத்தனை பேரென்றெண்ணக் கேட்டதா?)
    62
    14
    'கெஞ்சிடின் மிஞ்சுவர், மிஞ்சிடிற் கெஞ்சுவர்'
    66
    144-5
    'புலி வேட்டைக்குப் பொருந்துத் தவிலடி எலி வேட்டைக்கு மிசையுமோ'
    67
    162
    'கள்ள மனந்தான் துள்ளும்'
    163
    'தன்னுளந் தன்னையே தின்னும்'
    (தன்னெஞ்சே தன்னைச் சுடும்)
    164
    'குற்றமுள்ளோர் கோழையர்'
    72
    131
    'கைதொடின் மஞ்சளுங் கரியாகும்மே'
    75
    208
    'ஜனமொழி தெய்வமொழி'
    80
    23
    'இலவு காத்த கிளி'
    80
    24
    'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணல்'
    (மொய்க்கு நெய்க்குடந்தன்னை யெறும் பென்னவே - திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்.)
    85
    84
    'இரவியை நோக்கற்கேன் விளக்குதவி' யானை பார்க்க வெள்ளெழுத்தா?
    90
    66
    'சுட்டதோர் சட்டிகை விட்டிடலென்ன'
    (சட்டி சுட்டதும் கைவிட்டதும்)
    95
    244
    'நெருப்பிடை யிழுதெனநெக்கு நெக்குருகி'
    99
    31-2
    'மீனுண்ணக் குளக்கரை யிருக்குங் கொக்கென அடங்கி'
    (ஓடு மீனோட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாங் கொக்கு)
    'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து' -
    (குறள் 49-10)
    113
    4
    'நெருப்பிடை நெய் சொரிந்தற்று'
    (எரிகிற வயிற்றில் எண்ணெய் ஊற்றினாற்போல்)
    115
    47
    'இருதலைக் கொள்ளியி லெறும்பானேன்'
    (இருதலைக் கொள்ளியினுள் ளெறும்பொத்து) - திருவாசகம்;நீத்தல் விண்ணப்பம்.
    49-50
    'ஓர்சிறு மயிரினை யிழக்கினு மாயுமோ கவரிமா'
    'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
    உயிர்நீப்பர் மானம் வரின்' -
    (குறள் 97-9)
    116
    75
    'பருதிகண்டன்றோ பங்கயம் அலரும்!'
    118
    135-6
    'கண்ணிடு மணல்போல் உறுத்துவ'
    (கண்ணில் மண்ணள்ளிப் போட்டதுபோல்)
    126
    24-25
    'வேலியே தின்னில் தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர்'
    (வேலியே பயிரைத் தின்றால்.....)
    126
    31-32
    'எலிப்பகை தொலைக்க இருந்த தன் வீட்டில் நெருப்பினை யிடல் போல'
    132
    183
    'கெட்டார்க் குலகி னட்டாரில்லை'
    'கெட்டார்க்கு நட்டாரில்' -
    (குறள் 130-3)
    'கெட்டார்க்கு நட்டாரோவில்'
    (பழமொழி 59)
    133
    191
    'எரியிடுவானோ இல்லிடை?'
    134
    216-7
    'கருமருந்தறையிற் சிறுபொறி சிதறினும்
    பெருநெருப்பன்றோ'
    (காட்டுத் தீப்போல் பரவியது)
    142
    174
    'கைக்கெட்டியது தன் வாய்க் கெட்டுதற்குள்'
    (கைக்கெட்டினது வாய்க் கெட்டாமற் போதல்)
    'Many a slip between the cup and the lip'
    148
    364
    'சம்மதக் குறியே மௌனம்'
    (Silence implies consent)
    157
    9
    'கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு'
    (ஏழை சொல் அம்பல மேறுமோ?)
    158
    30
    'நொந்த புண்ணதனிலே வந்திடும் நூறிடி'
    (பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்'
    'Misfortune never comes single'
    158
    33
    'மூடிடில் தீயும் மூளு மும்மடங்காய்'
    164
    40
    'வைத்ததாராயினென்? வெந்தது வீடு!(யார் வைத்த தீயோ வீடு வெந்தது சரி)
    166
    75-76
    'ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே'
    'பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே'
    (ஆட்பாதி யாடைபாதி)
    (செந்தமிழும் நாப்பழக்கம்)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:33:02(இந்திய நேரம்)