Primary tabs
-
மனோன்மணீயம்
233
II
திருக்குறள்
பக்கம்வரி3116'கருவியுங் காலமும் அறியில் அரியதென்'"அருவினை யென்ப துளவோ கருவியாற்காலம் அறிந்து செயின்" (அதிகாரம் 49, செய்யுள் 3)40170-1'வினைதெரிந் துரைத்தல் பெரிதல. அஃதுதனை நன்கு ஆற்றலே ஆற்றல்'"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாஞ்சொல்லிய வண்ணஞ் செயல்" (அதி. 67, செ.4)40172-78'அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம்பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும்தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும்வாய்மையும் சொல்லில் வழுவா வன்மையும்துணிவும் காலமும் களமும் துணியுங்குணமும், மந்திரத் தலைவர் துணைமையும்உடையனே விளையாள் தூதன்'"அன்புடைமை யான்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு" (அதி. 69, செ.1)42234'என்னே!இவன்மதி முன்னிற் பவையெவை?'"மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவை" (அதி. 64, செ.6)43268'மூக்கிற் கரியர் உளர்என நாயனார்தூக்கிய குறளின் சொற்படி'"புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து" (அதி. 28, செ.7)44278-80'தீரா இடும்பையே தெளிவில் ஐயுறல்,எனைவகை தேறியக் கண்ணும், வினைவகைகோடிய மாந்தர் கோடியின் மேலாம்'"தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவும்தீரா விடும்பை தரும்" (அதி. 8%, செ. 10)45312'அரசர்க்கு அமைச்சர் அவயவம் அலரோ?'"படைகுடி கூழமைச்சு நட்பர ணாறுமுடையா னரசரு ளேறு" (அதி. 39, செ.1)4750-1'உளத்தோடு உளஞ் சென்று ஒன்றிடிற் பின்னர்வியர்த்தமே செய்கையும் மொழியும்'"கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனு மில" (அதி. 110. செ. 10)50111-12'காதலா மூழிக் கனன்முன் வையாய்மாதரார் கட்டுரை மாயா தென்செயும்?'"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்" (அதி. 44, செ.5)52164-65'குணமு முளார் இல் துணைவராயின்இல்லது என் உலகில்'"இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்இல்லவள் மாணாக் கடை" (அதி. 6, செ. 3)65107-8'தினைத்துணை தீங்கவன் செய்யினென் மகட்குப்பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன்'"தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணு வார்" (அதி. 44, செ. 3)7068-69'உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்'"சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்உழந்து முழவே தலை" (அதி. 104, செ.1)8578-80'உளமும் உளமும்
நேர்பட அறியா என்றோ நினைத்தாய்?ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர்'"புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்" (அதி. 79, செ.5)93172-76'இத்தனை யுலகில் எத்துயர் காணினும்அத்தனை துயரும்நம் அழுக்கெலாம் எரித்துச்சுத்தநற் சுவர்ணமாச் சோதித்து எடுக்கவைத்தஅக் கினியென மதித்தலே உயிர்கட்குஉத்தம பக்தியென்று உள்ளுவர்'"சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு" (அதி. 27, செ. 7)9931-32'மீன் உண்ணக்
குளக்கரை இருக்குங் கொக்கென அடங்கி'"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்குத்தொக்க சீர்த்த விடத்து" (அதி. 49, செ. 10)9936'எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்'"எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு" (அதி. 47, செ. 7)103153-154'போர்க்குறிக் காயமே புகழின் காயம்.யார்க்கு அது வாய்க்கும் ஆ!ஆ!நோக்குமின்!அனந்தந் தலைமுறை வருந்தனி மாக்கள்,தினந்தினம் தாம்அனு பவிக்குஞ் சுதந்தரம்தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச்சிந்தை யன்புருகிச் சிந்துவர் கண்ணீர்,என்றால் அப்புண் 'இறந்துகோட் டக்கது'அன்றோ? அறைவீர், ஐயோ! அதுவும்புண்ணோ? புகழின் கண்ணே, எவரேபுண்படாது உலகிற் புகழுடம்பு அடைந்தார்?புகழுடம்பு அன்றி்இவ் இகழுடம் போமெய்?கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும்பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ!'"விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் னாளை யெடுத்து" (அதி. 78, செ. 6)"சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து" (அதி. 78, செ. 7)"புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடிரந்துகோட் டக்க துடைத்து" (அதி. 78, செ.10)103167'பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர்'"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலிற் றோன்றாமை நன்று" (அதி. 24, செ.6)10084-85'எண்ணுமின் நன்றா யேற்குமின்!பின்புநீர்பண்ணுந் தவறுநம் பாலாய் முடியும்'"எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்கு" (அதி. 47, செ. 7)11549-51'ஓர் சிறு
மயிரினை யிழக்கினும் மாயுமே கவரிமாபெருந்தகை பிரிந்தும் ஊன் சுமக்கும் பெற்றிமருந்தா யெனக்கே இருந்ததே நாரணா'"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னாருயிர்நீப்பர் மானம் வரின்" (அதி. 97, செ. 9)"மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமைபீடழிய வந்த இடத்து" (அதி. 97, செ.8)11680'மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம்'"செய்தக்க வல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்" (அதி. 47, செ. 6)11685-87'அழகார் அம்புயப்
பூவின துயர்வு பொய்கையின் ஆழத்துஅளவு ஆவதுபோல்'"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய துயர்வு" (அதி. 60, செ.5)120191"மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனெனஈண்டவன் இருக்குக: இருக்குக.""வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று" (அதி.94, செ.1)123263-4'மானமே பெரிதுசிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும்'"சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பின்பட்டுப்பா டூன்றுங் களிறு" (அதி. 60, செ.7)123270-1'நாணா துலகம் ஆளல்போல் நடித்தல்நாணாற் பாவை உயிர்மருட் டுதலே'"நாணகத் தில்லாரியக்க மரப்பாவைநாணா லுயிர்மருட்டி யற்று" (அதி. 102, செ.க)