தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam


  • மனோன்மணீயம்

    235

    IV

    சிலப்பதிகாரம்

    பக்கம்
    வரி
    20
    157-8
    'துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
    கண்படு மெல்லை'
    “துணைபுண ரன்னத் தூவியிற் செறித்த
    இணையணை மேம்படத் திருந்துதுயில் பெறாஅது”

    (அந்திமாலைச் சிறப்புச்செய்காதை 4, 66-7)

    38
    110
    'வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம்
    ஓமென வோவிறந் தொலிக்க'
    “கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்குங்
    காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
    ஓவிறந் தொலிக்கும் ஒலியே யல்லது”

    (நாடுகாண்காதை 10, 107-109)

    38
    118-26
    'துகிர்க்கா லன்னமும் புகர்க்காற் கொக்கும்
    செங்கட் போத்துங் கம்புட் கோழியும்
    கனைகுரல் நாரையும் சினமிகு காடையும்
    பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும்
    என்றிவை பலவும் எண்ணில குழீஇச்
    சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும்
    அந்தியங் காடியின் சந்தங் காட்டித்
    தத்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும்
    பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்'
    “கம்புட் கோழியுங் கனைகுரல் நாரையும்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
    உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
    பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்”

    (நாடுகாண்காதை 10, 114-119)

    39
    127-30
    'வீறுடை எருத்தினம் வரிவரி நிறுத்தி
    ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப்
    பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப்
    போற்றிய குரவையே பொலிதரும் ஒருசார்'
    “பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
    ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்”

    (நாடுகாண்காதை 10, 134-135)

    38
    91-3
    'கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக்
    கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர
    மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்'
    “பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
    இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
    உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்
    பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
    மங்குல் வானத்து மலையிற் றோன்றும்
    ஊரிடை யிட்ட நாடுடன் கண்டு”

    (சிலப்பதிகாரம் : நாடுகாண்காதை-வரி. 148-153)

    “விளைவறா வியன்கழனிக்
    கார்க் கரும்பின் கமழாலைத்
    தீத்தெறுவிற் கவின்வாடி
    நீர்ச் செறுவில் நீணெய்தற்
    பூச்சாம்பும் புலத்தாங்கட்
    காய்ச்செந்நெற் கதிரருந்தி
    மோட்டெருமை முழுக்குழவி
    கூட்டுநிழற் றுயில்வதியும்”

    (பட்டினப்பாலை : 8-15)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:33:38(இந்திய நேரம்)