தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam


  • மனோன்மணீயம்

    237

    VI

    திருவாசகம்

    பக்கம்
    வரி

    3
    46-47

    'தென்பாண்டி நாடே சிவலோக மாமென

    முன்வாத வூரர் மொழிந்தனர்'

    "அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த

    அப்பர் சடையப்பன்" 

    (திருவம்மானை - 11)

    9
    39-41

    'யாரொடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?

    வார்கட லுலகில் வாழ்கிலன்.

    மாளுவன் திண்ணம் மாளுவன் வறிதே'

    "யாரொடு நோகேன் யார்க்கெடுத் துரைக்கேன்

    ஆண்டநீ யருளிலை யானால்

    வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்

    வருகவென் றருள்புரி யாயே"

    (வாழப்பத்து-1)

    54
    9-10

    'சித்தம் மத்துறு தயிரிற் றிரிந்து

    பித்துறச் செய்த'

    "மத்துறு தண்தயிரிற்புலன் தீக்கது லக்கலங்கி

    வித்துறு வேனை விடுதிகண் டாய்வெண் டலைமிலைச்சிக்

    கொத்துறு போது மிலைந்து சூடர்நெடு மாலைசுற்றித்

    தத்துறு நீறுட னாரச்செஞ் சாந்தணி சச்சையனே".

    (நீத்தல்விண்ணப்பம்.30)

    70
    78-79

    'குறும்புசெய் யெறும்புங் கோடி கோடியாப்

    புழுக்களும் பூச்சியும், பிழைக்குமா றென்னை'

    "எறும்பிடை நாங்கூ ழெனப்புல னாலரிப் புண்டலநத

    வெறுந்தமி யேனை விடுதிகண்டாய் வெய்யகூற் றெடுங்க

    உறுங்கடிப் போதவை யேயுணர் வுற்றவ ரும்பரும்பர்

    பெறும்பத மேயடி யார்பெய ராத பெருமையனே."

    (நீத்தல்விண்ணப்பம்-25)

    74
    187

    'தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணி'

    "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே."

    (சிவபுராணம்-வரி 61)

    80
    செ.24

    'நறுநெயுறு குடத்தெறும்பு நண்ண லென'

    "உள்ளன வேநிற்க இல்லன செய்யுமை யற்றுழனி

    வெள்ளன லேனை விடுதிகண்டாய் வியன் மாத்தடக்கைப்

    பொள்ளனல் வேழத் துரியாய் புலனின்கட்

    போதலொட்டா

    மெள்ளன வேமொய்க்கு நெய்க்குடந் தன்னை

    யெறும்பெனவே." 

    (நீத்தல்விண்ணப்பம் - 24)

    95
    236

    "எய்ப்பினில் வைப்பா யிருந்த பொருளை

    காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க"

    (திருவண்டப்பகுதி-வரி 105)

    115
    47

    'இருதலைக் கொள்ளியில் எறும்பானேனே'

    "இருதலைக் கொள்ளியி னுள்ளெறும் பொத்து

    நினைப்பிரிந்த

    விரிதலை யேனை விடுதிகண்டாய் வியன் மூவுலகுக்

    கொருதலை வாமன்னு முத்தர கோசமங் கைக்கரசே

    பொருதலை மூவிலே வேல்வல னேந்திப் பொலிபவனே"

    (நீத்தல்விண்ணப்பம்-9)

    172

    வாழ்த்து:-

    'பள்ள வுவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென

    உள்ள முவந்தோடி ஒன்றானாய்'

    "வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

    பெருமானே யெனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

    பள்ளந்தா ழறுபுனலிற் கீழ்மேலாகப்

    பதைத்துருகும் அவர் நிற்க"

    (சுட்டறுத்தல், செ. 1)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:34:02(இந்திய நேரம்)