தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam


  • மனோன்மணீயம்

    238

    VII

    கம்பராமாயணம்

    பக்கம்
    வரி

    8
    28-29

    'ஏனிது ஏனிது வாணீ! எட்பூ

    ஏசிய நாசியாய் இயம்புக'

    "எட்குலா மலர் ஏசிய நாசியாய்"

    9
    34

    'தந்தையுங் கொடியன் தாயுங் கொடியன்'

    "மந்தரை பின்னரும் வரைந்து கூறுவாள்

    அந்தரந் தீர்ந்துல களிக்கு நீரினால்

    தந்தையுங் கொடியன் நற்றுயுந் தீயளால்

    எந்தையேபரதனே யென்செய்வா யென்றாள்"

    (அயோத்தியாகாண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலம் - 60, செ. 60)

    12
    143

    'போதுநீத் தெம்மனை புகுந்தாற் றிருவே'

    "பிடிபுக் காயிடை மின்னொடும் பிறங்கிய மேகம்

    படிபுக்கா லெனப் படிதரப் பரிபுரம் புலம்பத்

    துடிபுக் காவிடைத் திருமகள் தாமரை துறந்து

    குடிபுக்கா லெனக் குடிபுக்கர் கொடியன்ன மடவார்'

    (பாலகாண்டம்: வரைக்காட்சிப் படலம்-செ.12)

    38
    115

    'தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா'

    "தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்கக்

    கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண் விழித்து

    நோக்கத்

    தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகாயாழின்

    வண்டுகளி னிதுபாட மருதம்வீற் றிருக்கு மாதோ"

    (பாலகாண்டம்: நாட்டுப்படலம்-செ.4)

    99
    140-44

    'தூவியாற் றம்முடல் நீவிடிற் சிரிக்கும்

    சிறுமியர் என்னவச் செழுநில நங்கை

    உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி

    உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப்

    பயிர்மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள்'

    "உடுத்தநீர் ஆடையள் உருவச் செவ்வியள்

    பிடித்தரு நடையினள் பெண்மை நன்றிவன்

    அடித்தலம் தீண்டலின் அவனிக் கம்மயிர்

    பொடித்தன நிகர்க்குமாற் புல்லென் றுன்னுவாள்"

    (ஆரணியகாண்டம்: சூர்ப்பணகைப் படலம்-செ.19)

    55
    38-40

    'தேவ கன்னியர் முதலாந் தெரிவையர்

    யாவரே யாயினும் என்கண் தனக்கு

    மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யர்கொலோ?

    "ஏகநாயகன் தேவியை எதிர்ந்ததற் பின்னை

    நாகர்வாழ்விட முதலென நான்முகன் வைகும்

    மாகமால் விசும்பீறென நடுவண வரைப்பில்

    தோகை மாதர்கள் மைந்தரில் தோன்றினர்சுற்ற"

    (சுந்தரகாண்டம்: பிணிவீட்டுபடலம்-செ.45)

    100
    75

    'கொடிக்கரங் காட்டி அழைப்பதுங் காண்டி'

    "மையறு மலரினீங்கி யான்செய்மா தவத்தின் வந்து

    செய்யவ ளிருந்தா ளென்று செழுமணிக் கொடிகள்

    என்னும்

    கைகளை நீட்டி யந்தக் கடிநகர் கமலச் செங்கண்

    ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்றதம்மா"

    (பாலகாண்டம்: மிதிலைக்காட்சிப் படலம்-செ.1)

    101
    92-93

    'அலையெறிந் தீதோ ஆர்த்தனள் கேண்மின்

    முலை சுரந் தூட்டிய முதுநதி மாதா'

    "இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர்தம்

    பரவு நல்லொழுக் கின்படி பூண்டது

    சாயு வென்பது தாய்முலை யன்னதிவ்

    உரவு நீர்நிலத் தோங்கும் உயிர்க்கெலாம்"

    (பாலகாண்டம்: ஆற்றுப்படலம்-செ. 12)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:34:14(இந்திய நேரம்)