Primary tabs
பார்க்கமாட்டார்கள். உண்மைகளை உணர்வார்கள். இக்கால நிலைமைக்கு ஏற்றவாறு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு முன்னேற வழி காண்பார்கள்.
வெறுப்பு பயன் தராது; விருப்பே எதற்கும் துணை செய்யும். தமிழ் வளர, தமிழர் முன்னேற விருப்பத்துடன் உழைக்க வேண்டும். பிற மொழிகளையும், பிற மக்களையும் வெறுப்பதனால் எப்பயனும் இல்லை.
இதுவே பழந்தமிழர் பண்பாடு. இத்தகைய சிறந்த பண்பாட்டைத் தமிழர்கள் பின்பற்ற வேண்டும். இந்நோக்கத்துடனேயே, பழந்தமிழர்களின் பண்பாட்டை எடுத்துக் காட்டும் வகையில் இந்நூல் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலை வெளியிட முன்வந்த பிரசுரத்தாருக்கு எனது நன்றி.
10.2.57.
சென்னை-24.