Primary tabs
வாழ்வு பற்றிய உண்மைகள்; போர் முறைகள்; புராணங்கள்; வேதம்; வேள்வி; தவம்; தவப்பயன்; பொது நீதி; ஆகியவை பற்றிய கருத்துக்கள் எல்லாம் பாரதநாடு முழுவதும் ஒரேவிதமாகவே பரவியிருந்தன. பண்டைத் தமிழ் நூல்களிலே இவைகளைப் பற்றிக் காணப்படும் கொள்கைகளுக்கும் வடமொழி நூல்களின் கொள்கைகளுக்கும் முரண்பாடில்லை.
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்
என்று பாரதி, நமது நாட்டின் ஒன்றுபட்ட பண்பாட்டைப் பற்றி உணர்த்தியிருப்பது உண்மையாகும்.
இவ்வுண்மையை மறந்து அல்லது மறைத்து, ‘‘பழந்தமிழர்கள் புலால் அருந்தாதவர்கள்; மதுபானம் செய்யாதவர்கள்; ஆரியர்கள்தாம் இப்பழக்கங்களைத் தமிழர்களிடம் புகுத்தினார்கள்’’ என்று சொல்லுகின்றவர்கள் கூட உண்டு.
இது மிகவும் வேடிக்கையான வாதம். தமிழ் நூல்களைப் படிக்காதவர்களை ஏமாற்றும் வாதம். பழந்தமிழ் நூல்களில் இவைகள் வெறுக்கப்படவில்லை. ஒளவையார், கபிலர் போன்ற புலவர்கள் எல்லாம், மாமிசத்தையும் மதுவையும் சிறந்த உணவாகப் பாராட்டியிருக்கின்றனர்.
வடமொழியின் மேலும், வடவர் மேலும் வெறுப்பு கொண்டவர்கள் வாய்க்கு வந்தவாறு பேசுகின்றனர்; எழுதுகின்றனர். வகுப்பு வேற்றுமை, ஆரியர் நுழைப்பு; மதம், ஆரியர் புகுதல்; தெய்வங்கள்; வடவர் கற்பனை; மோட்ச நரகம்; ஆரியர்கள் சூழ்ச்சி; புண்ணிய பாவம் அவர்கள் ஏற்படுத்தியவை; என்றெல்லாம் சொல்லிவிடுகின்றனர்.
பழந்தமிழ் நூல்களை நடுநிலையிலிருந்து காண்பவர்கள் வெறுப்பாளர்கள் கக்கும் வீணுரைகளைத் திரும்பியும்