தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU

சாமி. சிதம்பரனார்
iv

இன்று, பண்டைத் தமிழ் நூல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்; அவைகளைப் படித்தறிய வேண்டும்; என்னும் ஆர்வம் தமிழகத்திலே பெருகி வருகின்றது. இத்தகைய ஆர்வம் உள்ளவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களின் உண்மைக் கருத்துக்களை எடுத்துக் காட்ட வேண்டும்; அவர்களுடைய தமிழ் இலக்கிய தாகத்தைத் தீர்க்கவேண்டும்.

ஒரு சிலர் இந்த உண்மையை மறந்துவிடுகின்றனர். இன்றைய சமுதாய முன்னேற்றத்திற்கு, ஏற்ற கொள்கைகள் எவையெவை என்று தாம் எண்ணுகின்றனரோ, அவைகள் எல்லாம் தமிழ் இலக்கியங்களிலே இருக்கின்றன என்று சொல்ல முன்வருகின்றனர்; எழுதியும் தீர்த்துவிடுகின்றனர்.

இப்படிச் சொல்லுவோரையும், எழுதுவோரையும் பார்த்து ‘‘ஐயா நீங்கள் எண்ணுவதற்கு மாறான கொள்கைகளும் பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகின்றனவே’’ என்று கேட்டால் போதும். அவர்களிடம் சீற்றம் பிறந்துவிடுகின்றது. உடனே அவர்கள் ‘‘அவைகள் எல்லாம் இடைக் காலத்திலே நுழைந்தவை; தமிழர்களின் பகைவர்களால், புகுத்தப்பட்டவை’’ என்று ஒரே போடு போட்டு விடுகின்றனர். இது சரியான சமாதானம் ஆகாது.

ஆரியர்-தமிழர் என்ற வேற்றுமையைக் கிளப்பும் ஒரு கும்பல் தங்கள் வெறுப்புக் கிளர்ச்சிக்குத் தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பயன்படுத்திக் கொள்ளுகின்றது. பழந்தமிழ் இலக்கியங்களில் பாரத நாட்டுப் பண்பாட்டில் வேற்றுமை இல்லை என்பதற்கான ஆதரவுகள் நிறைந்திருப்பதை, இக்கும்பல் மறைத்துவிடுகின்றது.

தெய்வங்கள்; தெய்வ வணக்க முறைகள்; இல்லற தர்மம்: அரசியல் நீதி; சமுதாய உயர்வு தாழ்வு; இவ்வுலக, மறு உலக

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 13:01:14(இந்திய நேரம்)