தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் அவர்களுக்கு இல்லை. ஆயினும் மனித உணர்வின் மென்மையான அம்சங்கள் குடிசைகளிலும் ஒளி விடுகின்றன. அன்பும் தியாகமும் அவர்களது வாழ்க்கையின் அடித்தளம், இவ்வடித்தளத்தின் மீது குடும்ப இன்பம் என்னும் உறுதியான கட்டிடம் எழுப்பப்படுகிறது.

ஆயினும் சமூக வாழ்க்கையினால் தோன்றும் பண ஆசையும், அந்தஸ்துப் பற்றும் குடிசைவாழ் மக்களையும் பீடிக்கிறது. அதனால் இளைஞரது காதல் பாதைக்குத் தடைகள் உண்டாகின்றன. பொருந்தா மணங்கள் நிகழ்கின்றன. கிழவனுக்குப் பணம் இருந்தால் 30 வயது இளம் பெண்ணை மனைவியாகப் பெற முடிகிறது. அவள் தாலிச் சிறையினுள் அடங்கி தனது உணர்ச்சிகளைக் கொன்றுவிட முயன்று நடைப் பிணமாக வாழ வேண்டி வருகிறது. உணர்ச்சியை அடக்க முடியாதவர்கள், திருமணக் கட்டிற்கு வெளியே காதல் இன்பம் நாடுகிறார்கள். அதுபோலவே சொத்துரிமை காரணமாகக் குமரி, குழந்தைக்கு வாழ்க்கைப் படுவதும் உண்டு. அவர்கள் முறை மாப்பிள்ளைகளோடு களவு ஒழுக்கம் கொள்ள சமூக பழக்கம் அனுமதிக்கிறது. குடும்ப இன்பத்தை பொருளாதார ஏற்றத் தாழ்வும், நிலப்பிரபுத்துவக் கொள்கையும் சீரழிக்கின்றன. இந்நிலைமை முழுவதும் பல நாட்டுப் பாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன. குடும்பவாழ்க்கையில் ஆண் ஆதிக்கம் கூடாது இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து, குற்றங் குறைகளைப் பொறுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தைப் பல பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. ‘ஆக்கத் தெரியாத அணங்கு’ என்ற பாடல் இதற்கோர் நல்ல உதாரணம்.

சொந்தத் தொழிலில் உழைப்போடும், பிறர் நிலங்களில் உழைப்போடும் கிராமத்தில் வாழ்கின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்த்தல் நியாயம். ஆனால் சோம்பேறித்தனமும், ஏமாற்றுதலும் கூடாது என்று நாட்டுப் பாடல்கள் போதிக்கின்றன. உழைப்பின் உயர்வைப் பல பாடல்கள் போற்றுகின்றன. சோம்பேறிக் கணவனைத் திருத்தி உழைப்பாளியாக்க முயலும் மனைவியரை நாட்டுப் பாடல்களில் அடிக்கடிச் சந்திக்கிறோம். நியாயமாகக் கூலி கொடுக்கும் முதலாளியைப் புகழ்வதும், கொடுமைக்கார முதலாளியை இகழ்வதும், தொழிலாளியின் இயற்கை. இவ்வுணர்ச்சியையும் நாட்டுப் படல்களில் காண்கிறோம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:53:31(இந்திய நேரம்)