தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தாலாட்டு
கோயிலுக்கு என்ன செய்வோம்?

குழந்தை, தாய் தந்தையர் மனம் குளிர வளர்ந்து வருகிறான். அவர்கள் மகிழ்ச்சி தாங்காமல் இவ்வரத்தைத் தனக்களித்தற்காக திருப்பதி வெங்கடாசலபதிக்கும், மதுரை மீனாட்சிக்கும்,உள்ளூர் திரௌபதியம்மனுக்கும் என்னென்ன நிறைவேற்றுதல்கள் செய்ய வேண்டுமென எண்ணியிருக்கிறார்களோ, அதனை மகனிடம் சொல்லுகிறாள்.

 
கட்டைக் களஞ்செதுக்கி,
கருமலையைச் சூடேத்தி
பொன்னைப் பொலி போடும்
புண்ணியனார் பேரரசோ?
சாலை பதிப்பமோ,
சத்திரங்கள் கட்டுவேமா!
மதுரைக்கும், திருப்பதிக்கும்,
வகுப்போமே பூஞ்சோலை,
கடலுக்கு சம்சாரி,
கப்பலுக்கு வியாபாரி,
இனி வார கப்பலுக்கு,
உங்க தாத்தா தீர்த்த கணக்காளி!
செங்கல் அறுத்து நான் பெத்தாக்கு,
சித்திரம் போல் வீடு கட்டி
அண்ணாந்து பாரய்யா நம்ம தாத்தா
அன்னக் களஞ்சியத்தை
அரண்மனைக்கு மேற்கே
ஆரவல்லி நாடகமாம்
குறிஞ்சி போட்டுக் கூத்துப் பார்க்கும்
கோர்டார் உங்களப்பா
அவரமணி, துவரமணி,
அரண்மனைக்கே ஒத்த மணி!
துவரமணி பெற்றெடுத்த
துரைமகனே நித்திரைசெய்
மானத்து மீனோ!
மேகத்துப் பன்னீரோ!
தாகத்தைத் தீர்க்க வந்த
தங்க ரதக் கிளியோ
வெள்ளி வளையோடி
மேகத்து மின்னோடி
தங்க வளை ஒடுதில்ல உங்க தாத்தா
அதிகாரி வாசலிலே
பட்டணத்து வில்லையோ,
பணம் பெற்ற பன்னீரோ,
நித்தம் நித்தம் பூசி வரும்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:03:55(இந்திய நேரம்)