தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மானங்கெட்ட வண்டி

கிராமத்தில் ஓரு வண்டியை வைத்து வாடகைக்கு விட்டுப் பிழைக்கிறான் இவன். வண்டிக்கு மாடு வேண்டும். அவன் வீட்டில் சோற்றுக்கு இல்லை. மாட்டுக்கு வைக்கோல் எப்படி வாங்குவது? நகரத்துக்கு வண்டியோட்டி போனால் லாந்தர் வைத்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் போலீஸ்காரன் தொந்தரவு செய்து காசு பிடுங்குவான். அதற்கு எண்ணெய் வேண்டும் ; வைக்கோல் இல்லாத மாடு வண்டியிழுக்குமா?

இப்பாட்டு அவன் படும்போது மற்றொரு ஜீவனையும் நினைக்கிறான். ஈரப் புழுங்கலை வைத்துக்கொண்டு அவனுடைய மனைவி எப்படிச் சமையல் செய்யப் போகிறாளோ?

வீட்டில் சோத்துக்கில்ல
தீபத்துக்கு எண்ணெயில்ல
மாட்டுக்கு வக்கலில்ல
மானங் கெட்ட வண்டியடி
நடவாத மாட்டோட
நான்படும் பாட்டோட
ஈரப்புழுங்கலோட
என்னபாடு படுதாளோ !

வட்டார வழக்கு: இல்ல-இல்லை ; ஓட-ஓடு ; படுதாளோ-படுகிறாளோ.

சேகரித்தவர் :
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி,நெல்லை மாவட்டம்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:56:13(இந்திய நேரம்)