Primary tabs
உரித்தாக்கல்
திருவார் பாண்டி நன்னாட்டில்
திகழும் தெற்கூர் பதிச்செல்வர்
தெய்வப் பற்றும் தமிழ்ப்பற்றும்
சிற்பக் கலையிற் பெரும்பற்றும்
உருவாய் வந்த அருங்கலைஞர்
உழைப்பால் ஆலை பலநிறுவி
உழைப்போர்க் கென்றும் வாழ்வளித்த
ஒப்பில் மதுரைத் தொழிலதிபர்
பெருகும் இளைஞர் நிலையுயரப்
பெரிய கலைக்கல் லூரிகளும்
பேணும் தொழில்நற் பள்ளிகளும்
பிறவும் அளித்த பெருவள்ளல்
திருத்த முறநற் றமிழ்வளர்த்த
சைவ சமயப் பேரறிஞர்
தியாக ராசர்க் கிந்நூலைச்
சிறப்பாய் உரித்தாக் கிடுவேனே.
அ.கி. பரந்தாமனார்.