தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tvu



XIII

உலகுக்கோர்   ஐந்தொழுக்கத்தைத்   தருகிறார்    பாவேந்தர்
பாரதிதாசனார். 1. ஓர் இனம் மற்றோர்  இனத்தை    மாய்க்கலாகாது.
2.  ஒரு  மொழி மற்றொரு மொழியை மாய்க்கலாகாது.  3. ஒரு நாடு
மற்றொரு நாட்டைப் பற்றிச் சுரண்டும் பான்மை கட்டோடு ஒழித்தல்
வேண்டும் . 4. உள்      நாட்டின் அமைதியைக் காக்கும் அளவுக்கு
மேல் பெரும்படை,  விலையேறப் பெற்ற அழிப்புக் கருவிகளை எந்த
நாடும் வைத்திருத்தல் கூடாது. உண்டாக்கக்கூடாது. 5. அங்கங்குள்ள
சான்றோரைக் கொண்ட ஓர்      உலகப் பெருமன்றம் மேற்சொன்ன
நான்குதிட்டங்களைச் சிதறாமல் மேற்பார்வை பார்த்து வர வேண்டும்.

குயில், குரல் - 1, இசை - 33, 14.01.1959.

இப்படிப்பட்ட  உயரிய   எண்ணங்கொண்ட பாவேந்தரைத்தான்
குறுகிய புத்தி  கொண்டவரென்று     கடுகு உள்ளம் கொண்டவர்கள்
தூற்றுகின்றனர்  ! போகட்டும்.

பாரதிதாசனார் ‘குயில்’ இதழில் எழுதிய தலையங்கங்களை ஒன்று
திரட்டித் தொகுத்துதந்தபதிப்பாளர் முனைவர் ச.சு. இளங்கோவையும்,
மகிழ்ந்து  நூலாக்கி  வெளியிடும்நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தையும்
பாராட்டி மகிழ்கிறேன்.

                                         
243, லிங்கி செட்டி தெரு,
சென்னை - 600 001.

 ம.சு. சம்பந்தன்



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:14:17(இந்திய நேரம்)