தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tvu-முன்னுரை



XIV

முன்னுரை

“தமிழ்ப்பாடல்      மதம், சாதி, மூட எண்ணம் தரும் பாட்டாய்
இருப்பதினும், இல்லாமை   நன்று ” என்றும் “மாடுகளும் வழக்கத்தால்
செக்கைச் சுற்றும்,மடையர்களும்  இயற்றிடுவர் கடவுள் பாடல்” என்றும்
( எது இசை? ப.6 ) பாடி இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதைக்குப்
புதிய வார்ப்பினைத்  தந்தவர்      பாரதிதாசனார் ஆவார்.அவர் தம்
கருத்துக்களை வெளியிட பத்திரிகைகளை நடத்தினார்.

தேச சேவகன்,  ஆத்மசக்தி, டூப்ளக்ஸ், தாய்நாடு, புதுமை முரசு,
ஸ்ரீ சுப்ரமண்ய பாரதி    கவிதா மண்டலம், குயில், முதலிய ஏடுகளுக்கு ஆசிரியராக   விளங்கினார். அவற்றுள்     குயில் இதழைத் தவிர பிற
இதழ்களை மற்றவர்களே வெளியிட்டனர்.

குயில்   இதழுக்கு   மட்டும்   பாரதிதாசனே   ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருந்தார்.

இத்தொகுப்பு நூலில் குயில் நாளிதழிலும் கிழமை இதழிலும்,திங்கள் இருமுறை    இதழிலும்    வெளிவந்த தலையங்கக் கட்டுரைகள் இடம்
பெற்றுள்ளன.இனிக் குயில்          இதழின் தோற்றம் வளர்ச்சி பற்றிக்

குயில் முதல் புத்தகம்   1946 ஆம் ஆண்டு டிசம்பர்த்   திங்கள்
சென்னையிலிருந்து வெளிவந்தது.

இரண்டாம்   குயில்  இதழ் 1947 ஆம்  ஆண்டு   சூன் திங்கள்
25ஆம் நாளன்றும் மூன்றாம் குயில் இதழ் 1947ஆம் ஆண்டு ஆகஸ்த்
திங்கள் 25ஆம் நாளன்றும் வெளிவந்தன.

இரண்டாம், மூன்றாம்   குயில்   இதழ்கள்      டம்மி அளவில்
விலையுயர்ந்த   வழவழப்பான    காகிதத்தில்       புதுக்கோட்டைச்
செந்தமிழ்       அச்சகத்தில் ஒரு ரூபாய் விலையில் அச்சிடப்பட்டன.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 11:14:28(இந்திய நேரம்)