தமிழ்மொழி வரலாறு போன்ற நூல்களின் வாயிலாகத்
தம் மொழியியல் ஆய்வை வெளிப்படுத்தினார்.
காலவடிப்படையில் தமிழ், திராவிடம்,
பிராகிருதம், சமற்கிருதம் என்ற வரிசை
ஒழுங்கில் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்று
வலியுறுத்தினார் பாவாணர். பெருமளவில் தமிழின்
கொடை திராவிடத்திற்கு இருப்பது போல்
பிராகிருதத்தின் கொடை சமற்கிருதத்திற்கு
இருக்கிறது. பிராகிருதம் முந்திச்
செய்யப்பெற்றது. ஆனால் இம முறையொழுங்கைத்
தலைகீழாக முறைமாற்றிச் சமற்கிருதத்தின்
கிளைமொழி பிராகிருதம் என்பர் சிலர். இவ்
வடிப்படையில் பல வடசொற்கள் பிராகிருதத்தின்
வாயிலாகத் தமிழில் புகுந்தன எனச்
சொல்லாடுவர். இவற்றை எல்லாம் மறுத்துத் தம்
வேர்ச்சொல்லாய்வின் மூலம் தமிழ்ச் சொற்களே
பிராகிருத்தின் வாயிலாகச்
சமற்கிருதத்திற்குச் சென்றுள்ளதை நிறுவுவது
பாவாணரியம்.
பாவாணரது மொழியியல் ஆய்வு பிற அறிஞர்களின்
ஆய்வினின்று வேறுபட்டது. பாவாணரின் மொழியியல்
ஆய்வின் பெரும்பகுதி தமிழின் தொன்மை, ஆற்றல்,
வளமை போன்றவற்றைக் காட்டுவதற்கு விழைகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சொல்லாய்வை
மேற்கொண்டு அதன்வழியே மொழியியல் கொள்கைகளை
விளக்குவது இவரது தனித்தன்மையாகும்.
பெருமளவில் சொல்லாய்வைப் பயன்படுத்தி
வடமொழிக்கு வரலாறு வரைந்துள்ளமை இங்குக்
குறிப்பிடத்தக்கது. பாவாணரது ஆய்வு முடிபுகளை
அனைவரும் ஒப்பத்தகுந்த வகையில் கொண்டு
செலுத்தும் பெரும் பொறுப்பு நம்முன்
இருக்கிறது.
பssாவாணரது மொழியியல் ஆய்வு பிற அறிஞர்களின்
ஆய்வினின்று வேறுபட்டது. பாவாணரின் மொழியியல்
ஆய்வின் பெரும்பகுதி தமிழின் தொன்மை, ஆற்றல்,
வளமை போன்றவற்றைக் காட்டுவதற்கு விழைகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சொல்லாய்வை
மேற்கொண்டு அதன்வழியே மொழியியல் கொள்கைகளை
விளக்குவது இவரது தனித்தன்மையாகும்.
பெருமளவில் சொல்லாய்வைப் பயன்படுத்தி
வடமொழிக்கு வரலாறு வரைந்துள்ளமை இங்குக்
குறிப்பிடத்தக்கது. பாவாணரது ஆய்வு முடிபுகளை
அனைவரும் ஒப்பத்தகுந்த வகையில் கொண்டு
செலுத்தும் பெரும் பொறுப்பு நம்முன்
இருக்கிறது.
தெரிவு நிலைத் தொகுப்பாளர்,
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித்திட்ட
இயக்ககம்.
சென்னை - 8
அன்பன்
முனைவர் இரா.கு.ஆல்துரை,