தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Vannai


பாவாணரைப் போற்றும் பார்!

 
1940 ஆம் ஆண்டில் ஞா.தேவநேசன் என்றும் பின்னர்த் தேவநேசக் கவிவாணர் என்றும், தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டபின் தேவநேயப் பாவாணர் என்றும் புகழ் பெற்ற பாவாணர்க்கு நூற்றாண்டு விழா.
 
‘நேசம் என்பது நேயம் என்பதன் திரிபு‘ என்பதனை "என் பெயர் என் சொல்?" எனும் பாவாணர் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
சென்னைப் பள்ளியில் பணி - மன்னார்குடிப் பள்ளியில் பணி - சேலம் நகராட்சிக் கல்லூரியில் பணி - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணி என்றவாறு ஆசிரியப் பணியை நிறைவேற்றிய பாவாணர் ஒரு கட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. சுனித் குமார் சட்டர்சியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு அவர் பதவியைவிட்டு வெளியேறும் அளவுக்கு முற்றியது. இப்போது பார்ப்பவர்க்கு ‘இதற்காகவா விலகினார்? என்றும் ‘விலகியிருக்க வேண்டாமே!‘ என்றும் சொல்லத் தோன்றும். ஆனால் பாவாணர் எப்போது தமிழுக்கு இழுக்கு நேர்ந்துவிட்டது, தம் ஆய்வுக்குக் குந்தகம் ஏற்பட்டுவிட்டது என்று கருதினாரோ அப்போதே அவருக்குப் பதவியும் துச்சமாகப் போய்விட்டது. அக் காலகட்டத்தில் அவர் கூறிய வரிகளை மட்டும் நினைவிற் கொண்டால் போதும்.
"எனக்கு மனைவி உண்டு; மக்களும் உண்டு; அதோடு மானமும் உண்டு."
இந்த வரிதான் பாவாணரின் வாழ்க்கைச் சட்டம். அதனால் அவர் உற்ற இடர்கள் எண்ணில. போதிய வருவாய் இன்றி, உடல்நலம் குன்றிய காலத்தில் தம் மனைவியைக் கூடக் காப்பாற்ற முடியாத அளவுக்கு அவருக்குப் பெரும் நெருக்கடி நேர்ந்தது.
எனினும் எந்தச் சூழலிலும் தந்நிலை தாழாது வாழ்ந்துவந்தார் என்பதுதான் பெருமைக்குரியது.
"தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்" என்பதுதான் பாவாணர் அடிக்கடி கூறிவரும் தொடர். அதுவும் வரலாற்று உண்மையாகிவிட்டது. மறைமலையடிகளார் தொடங்கிய அந்த முயற்சி பாவாணரால் பெருமளவுக்கு எடுத்துச் செயற்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் தனித்தமிழ் அன்பர்கள் பலர் எழுந்தனர். நல்ல தமிழ்ப்பெயர் தாங்குதல், வடமொழியோ பிறமொழியோ கலவாத தமிழ்நடையில் பேசுதல், எழுதுதல்; ஒருவர்க்கொருவர் தொடர்புகொண்டு தமிழ் அறிஞர்களின் நூல்களைப் படித்தல், பரப்புதல், குடும்பம் குடும்பமாக இப் பணியைச் செய்தல் - என்றவாறு பணிகள் நடைபெற்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:23:16(இந்திய நேரம்)