xviii
வண்ணனை மொழிநூலின் வழுவியல்
1940-ல் ‘ஒப்பியன்
மொழிநூலில்‘ பாவாணர் இப்படி எழுதினார்: "நூற்றுக்குத் தொண்ணூறு தற்குறிகளும் முன்னேற்றத்திற்கு
முட்டுக் கட்டையான மூடக்களஞ்சியங்களும் பகுத்தறிவில்லா உருவேற்றிகளும் குடிகொண்ட
இந் நாட்டில் மொழிநூலைப்பற்றித் தவறான கருத்திருப்பதில் வியப்பொன்றுமில்லை"
என்றார்.
61 ஆண்டுகளுக்குப்பின்
பாவாணர் தம் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதா? ஏற்பட
வில்லையென்றால் என்ன கரணியம்?
இப்போது நாம் செயத்தக்கது
என்ன?
அன்பு நண்பர் இளவழகன்
இலக்கக் கணக்கான உருபா செலவிட்டுப் பாவாணரது அனைத்துப் படைப்புகளையும் கொண்டுவந்து
விட்டார். அதிலும் கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படியான அழகான படைப்புகள்.
காலத்திற்கும் அழியாத கற்கண்டுக் கட்டிகள்!
அவர் வரலாறு படைத்துவிட்டார்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?
ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும்
பாவாணர் நூல்கள் இடம் பெறட்டும். பாவாணரது கருத்துகள் உரம் பெறட்டும்.
இளவழகன் உழைப்புக்கு உளம் நிறைந்த
பாராட்டு.
முனைவர்.மு.தமிழ்க்குடிமகன்